அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் எமகண்ட காலத்தில் அவ்வப்போது குதிரைகளுக்குக் கொள்ளு மற்றும் இராசாளி பறவைகளுக்கு தானிய வகைகள் வழங்கி வரும்பொழுது தங்களின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
பரணி நட்சத்திரக்காரர்கள் யானைக்கும் யானைப் பாகனுக்கும் உணவு தானம் வழங்குவதும், காகத்திற்கு அன்னம் அளிப்பதும், வீட்டில் நெல்லிமரம் வளர்ப்பதும் தங்களுக்கு ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நிவர்த்திசெய்யும்.
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் ஆட்டுக்கறி உண்பதைத் தவிர்த்து, அத்திமரம் வளர்த்து, மயில்களுக்கு இரையளித்து வர, தங்கள் ஜாதகத்திலுள்ள அனைத்து தோஷங்களும் நிவர்த்திபெற்று வாழ்க்கையில் புதிய உச்சத்தைத் தொடலாம். மேலும் தங்கள் சகோதர- சகோதரிகளுக்கு ஆதரவாக இருந்து செயல்படுங்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/27star_0.jpg)
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் நாகத்தை வணங்கி புற்றுக்குப் பால் ஊற்றுவதாலும், நாவல் மரத்திற்கு நீர் விடுவதாலும், நாவல் மரத்தைத் தலவிருட்சமாகக்கொண்ட கோவில்களுக்குச் செல்வதாலும், வீட்டில் ஆந்தைப் படம் ஒன்றை வைத்து அதனை தினசரி பார்ப்பதாலும் தங்களுக்கு ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி வாழ்வில் வளம்பெற்று இன்புறலாம்.
மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் புற்றுக்குப் பால் வார்ப்பதும், கோழி மற்றும் சேவலுக்கு இரை போடுவதும், பிராமணர்கள், குழந்தைகள், சந்நியாசிகளுக்கு ஆடை மற்றும் உணவு தானமளிப்பதும் நல்ல பலன் தரும். மேலும் கோழி இறைச்சியைத் தவிர்ப்பதும், உலக்கையால் உரலை இடிக்காமல் இருப்பதும் அவசியம்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் பாம்புப் புற்றுகளுக்குப் பால் வார்ப்பதும், நாய்களுக்கு துரோகம் இழைக்காமல் இருப்பதும், புற்று மாரியம்மனை வணங்குவதும், ஆடலரசன் சிவபெருமான் உள்ள திருத்தலங்களான மதுரை, சிதம்பரம், குற்றாலம், திருநெல்வேலி உள்ளிட்ட திருத்தலங்களுக்குச் சென்றுவருவதும் தங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத் தைத் நன்மையை ஏற்படுத்தும்.
புனர்பூச நட்சத்திரக்காரர்கள் பூனைக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதும், மூங்கில் கன்றுகளை நட்டு வளர்ப்பதும் மூங்கில் மரங்களைத் தலவிருட்சமாகக்கொண்ட கோவில்களுக்குச் செல்வதும், அன்னப்பறவை யுடன்கூடிய சரஸ்வதி தாயாரை வணங்குவதும், ஆட்டு இறைச்சியைத் தவிர்ப்பதும், தங்களுக்கு ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நீக்கி வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
பூச நட்சத்திரக்காரர்கள் தங்களது நட்சத்திர விலங்கான ஆடுகளை வளர்ப்பதும், ஆடுகளை உணவில் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதும், அரச மர விநாயகரை 108 முறை வலம்வருவதும், காகத்திற்கு (நீர்க்காகம்) அன்னம் படைப்பதும், திருச்செந்தூர் முருகனை வழிபடுவதும் தங்கள் ஜாதகத்திலுள்ள அனைத்து தோஷங்களையும் நிவர்த்திசெய்து நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் பூனைக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதும், புன்னை மரத்தை நட்பு வளர்ப்பதும், கிச்சி- போன்ற பறவைகளுக்கு உணவளிப்பதும், புற்றுகளுக்குப் பால் வார்ப்பதும், திங்கட்கிழமை ஆயில்ய நட்சத்திரம்கூடிய நாளில் ராகு காலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்வதும் நன்று. இதனால் சகல தோஷங் களும் நிவர்த்திபெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.
மக நட்சத்திரக்காரர்கள் ஆலமர விநாயகரை வணங்குவதும், கருட பகவானை வணங்குவதும், கருட தரிசனம் செய்வதும், எமதர்மராஜாவிற்கு சிறப்பு அர்ச்சனை செய்வதும், பித்ரு தேவதை களான முன்னோர்களை வணங்குவதும், தினசரி சூரிய நமஸ்காரம் செய்வதும், இரண்டு மற்றும் நான்கு கால் உயிரினங்களை வளர்ப்ப தும் தங்களுக்கு ஏற்படும் அனைத்துவித தோஷங் களையும் நிவர்த்திசெய்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
பூர நட்சத்திரக்காரர்கள் விநாயகருக்கும் விநாயகர் வாகனத்திற்கும் சிறப்பு அபிஷேகம் செய்வதும், கருடனை வணங்குவதும், ஸ்ரீரங்கம் கருடபகவானுக்கு சிறப்பு ஆராதனை செய்வ தும், பலா மரத்தைத் தலவிருட்சமாகக்கொண்ட கோவிலுக்குச் செல்வதும், வருடம் ஒருமுறை காஞ்சி காமாட்சி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயாரையும் தரிசனம் செய்து வருதும், நன்று. இதனால் தங்கள் ஜாதகத்தில் ஏற்படும் அனைத்து தடைகளும் நிவர்த்தி பெற்று வாழ்வில் வளம்பெறலாம்.
உத்திர நட்சத்திரக்காரர்கள் பொதுவாக பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை வெல்லம், பச்சரிசி போன்ற உணவளிப்பதும், அலரி அல்லது இலந்தை மரத்திற்கு நீர் ஊற்றுவதும், இந்த நட்சத்திரத்தில் பிறந்த மகாலட்சுமித் தாயாரையும் தேவகுரு பிரகஸ்பதியையும் வணங்குவதும், ஸ்ரீரங்கத்திலுள்ள லட்சுமி அம்சமாக இருக்கும் வில்வமரத்தை வலம்வந்து வணங்குவதும் நன்று. மேலும் உத்திரமும் வெள்ளிக்கிழமையும் சேரும் நாளில் வீட்டில் அஷ்டலட்சுமி பூஜை செய்வது நல்ல முன்னேற் றத்தைத் தரும்.
அஸ்த நட்சத்திரக்காரர்கள் பருந்து பறவைக்கு விருந்து வைப்பதும், பெண் எருமைக்கு உணவளிப்பதும், திருப்பைஞ்ஞீ- சென்று எமதர்மராஜாவை வணங்குவதும், தினசரி சூரிய பகவானை வணங்குவதுடன் காயத்ரி தேவியின் காயத்ரி மந்திரம் சொல்லுவதும், அத்தி மரம் வளர நீர் ஊற்றுவதும், சூரிய பகவான் தன் மனைவி, மக்கள் என குடும்பத் துடன் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வணங்குவதும் தங்கள் வாழ்வில் எல்லையற்ற இன்பத்தைப் பெற்றுத்தரும்.
சித்திரை நட்சத்திரக்காரர்கள் புலியுடன்கூடிய ஐயப்பனை வணங்குவது, வில்வமரத்தைத் தலவிருட்சமாகக்கொண்ட கோவில்களுக்குச் செல்வதும், வில்வ மரம் நட்டு வளர்ப்பதும், மரங்கொத்திப் பறவைக்கு உணவளிப்பதும், தேவதச்சன் விஸ்வகர்மா ஆலயம் செல்வதும், ஸ்ரீரங்கம் சக்கரத்தாழ்வாரை வணங்கி 16 நெய்தீபம் ஏற்றுவதும், ஆண்டுக்கொருமுறை சுதர்சன ஹோமம் செய்வதும் சிறப்பு. இதனால் தங்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களும் நீங்கி, சக்கரத்தாழ்வாரின் 16 ஆயுதங்கள் உதவியுடன், 16 செல்வங்களுடன் வாழலாம்.
சுவாதி நட்சத்திரக்காரர்கள் எருமைக்கு உணவளிப்பதும், மருத மரத்திற்கு நீர் ஊற்றுவதும், தேனீ கூடுகளைப் பராமரிப்ப தும், தினசரி தேன்கூடு படத்தைப் பார்த்து வருவதும், மருதமலை முருகனை தரிசிப்பதும், தனது காலடியின்கீழ் எருமை மாட்டுடன் இருக்கும் காளிதேவியை வணங்குவதும், செவ்வாய்க்கிழமை சுவாதி நட்சத்திரத் துடன்கூடிய ராகுகாலத்தில் நரசிம்மப் பெருமாளை வணங்குவதும் நன்று. இதனால் தங்களுக்கு ஏற்படும் அனைத்துத் துன்பங்களும் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
விசாக நட்சத்திரக்காரர்கள் விளா மரம் நட்டு வளர்ப்பதும், செங்குருவி போன்ற பறவை களுக்கு உணவளிப்பதும், புலிமேல் அமர்ந்த ஐயப்பனை வணங்குவதும், மதுரைக்கருகே உள்ள திருமோகூர் கஜேந்திர வைபவம் காண்ப தும், காஞ்சிபுரம் கருடசேவை தரிசனம் செய்வதும், திருச்செந்தூர் கடற்கரையில் சந்தன மலையில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதும் நன்று. இதனால் தங்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களும் தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
அனுஷ நட்சத்திரக்காரர்கள் மான் பொம்மை அல்லது படம் வீட்டில் வைப்பதும், மகிழமரம் நட்டு வளர்ப்பதும், வானம்பாடி பறவைக்கு உணவு வைப்பதும், லட்சுமி நாராயணரை வணங்குவதும், நாச்சியார்கோவில் சென்று பெருமாளுடைய கல் கருடவாகன சேவையை தரிசனம் செய்வதும், பிராமணர்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்வதும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தரும்.
கேட்டை நட்சத்திரக்காரர்கள் மான்கள் படத்தை அவ்வப்போது பார்த்துவருவதும், திருச்சி அருகே திருப்பராய்த்துறை சென்று சிவபெருமானை வழங்குவதும், திருவிடந்தை ஊரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வராகப் பெருமாளையும், ஸ்ரீமுஷ்ணத்திலுள்ள பூவராகப் பெருமானையும் வணங்கிவர, தடைப்பட்ட அனைத்து சுப காரியங்களும் இனிதே நிறைவேறும்.
மூல நட்சத்திரகாரர்கள் நாய் இனங்களுக்கு துரோகம் இழைக்காமல், பிஸ்கட் போன்ற உணவளிப்பதும், மரா மரம் வளர்ப்பதும், பருந்துகளுக்கு உணவளிப்பதும், பிரதி மூல நட்சத்திரத்தில் ஆஞ்சனேயரை வழிபாடு மற்றும் ஸ்ரீராமஜெயம் சொல்வதாலும் அனைத்து தோஷங்களும் விலகப்பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம்.
பூராட நட்சத்திரக்காரர்கள் குரங்குகளுக்கு பழங்கள் தருவதும், வஞ்சி மரத் தலங்களுக்குச் செல்வதும், கௌதாரி பறவையைப் பார்த்துவருவதும், வருணபகவான் உள்ள கோவில்களுக்குச் சென்று வருவதும், தங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி தாயாரை வழிபட்டு வருவதும் சிறப்பு. இதனால் சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் உத்திராட நட்சத்திரக்காரர்கள் பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்கிவர குழந்தை பாக்கியமும், கீரிப்பிள்ளை படத்தைப் பார்த்து வர நன்மைகளும்; பலா மரம் வளர்ப்பதும், வலியான் பறவைகளுக்கு உணவளிப்பதும், ஸ்ரீரங்கத்திலுள்ள விஸ்வேஸ்வரரை வணங்குவதும், பிள்ளையார்பட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் உட்பட அனைத்து விநாயகர் கோவில்கள் சென்று வணங்குவதும், யானைகளுக்கு வாழைப்பழம் வழங்குவதும் சகல நன்மைகளும் தரும்,
திருவோண நட்சத்திரக்காரர்கள் குரங்கு களுக்கு வாழைப்பழம் வழங்குவதும், வீட்டில் எருக்கு விநாயகர் வைப்பதும், நாரைகளுக்கு உணவளிப்பதும், செவ்வாய் பகவானை வணங்குவதும், லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் திருமலை சீனிவாசப் பெருமாள் உருவம்கொண்ட மகாவிஷ்ணுவை வணங்குவதும், சிராவண மற்றும் ஏகாதசி விரதம் இருப்பதும் தங்களுக்கு அனைத்து நன்மைகளையும் பெற்றுத் தரும்,
அவிட்ட நட்சத்திரக்காரர்கள் அத்ரவன், அணிலன், அனலன், ஆபன், சோமன், துருவன், பிரத்யூசன், பிரபாசன் ஆகிய அஷ்ட வசுக்களை வணங்குவதும், சிங்கம் உருவம் கொண்ட படங்களைப் பார்ப்பதும், வன்னிமர தலங்கள் சென்று வணங்குவதும், பொன்வண்டு பார்ப்பதும், அனந்த கோலத்திலிருக்கும் பெருமாளை வணங்குவதும், சப்த கன்னியர் களை வணங்குவதும் தங்கள் வாழ்க்கையில் மிகுந்த நன்மையை ஏற்படுத்தும்,
சதய நட்சத்திரக்காரர்கள் காக்கைக்கு அன்னமிட்டு முன்னோர்களை வழிபடுவதும், குதிரைகளுக்குக் கொள்ளு தருவதும், கடம்ப மர தலவிருட்சமாகக்கொண்ட குளித்தலை கடம்பவனேஸ்வரரை வணங்குவதும், திருப்பைஞ்ஞீலி சென்று எமதர்மராஜாவை வணங்குவதும், எருமை மாட்டிற்கு அவ்வப் போது அகத்திக்கீரை தருவதும், முன்னோர் களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்வதும் தங்கள் வாழ்க்கையில் நன்மையை ஏற்படுத்தும்.
பூரட்டாதி நட்சத்திரகாரர்கள் வியாழக் கிழமைகளில் லட்சுமி குபேர பூஜை செய்வதும், சிங்க வாகனத்தில் இருக்கும் காளி தெய்வத்தை வணங்குவதும், உள்ளான் பறவைகளுக்கு உணவளிப்பதும், சித்தர்கள் ஜீவசமாதிக்கு அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சென்று வருவதாலும் தங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று வாழலாம்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பசுபதீசுவரர் மற்றும் பசுக்களை வணங்குவதும், வேப்பமரம் வளர்த்துவருவதும், கோட்டான் பறவைகளுக்கு உணவளிப்பதும், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் கோபூஜை செய்வதும், பசுக்கள் வழிபட்ட சிவாலயங்கள் சென்று வழிபடுவதும், காமதேனு கோவில்களுக்குச் செல்வதும் தங்களுக்கு ஏற்படும் அனைத்து இடர்களையும் நீக்கி வாழ்க்கையில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
ரேவதி நட்சத்திரக்காரர்கள் யானைக்கு வாழைப்பழம், கரும்பு வழங்குவதும், சிவ பெருமானுக்கு இலுப்பை எண்ணெயால் தீபமேற்றுவதும், தாங்கள் பிறந்த தமிழ் மாதம், ஜென்ம நட்சத்திரத்தன்று ஸ்ரீரங்கநாதர் மற்றும் ரங்கநாயகித் தாயாரை வழிபதுவதும் நன்று. இதனால் தங்கள் வாழ்வில் வசந்தம் உண்டாகும்.
செல்: 89035 51587
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-09/27star-t.jpg)