முனைவர் முருகு பாலமுருகன்

52

மீன லக்னம் 2-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி மற்ற பாவங்களைக் காணலாம்.

3-ஆம் பாவம்

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் பாவத் தைக்கொண்டு சுயமுயற்சி, இளைய சகோதர- சகோதரி அமைப்பு, வீரம், விவேகம் பற்றி அறியலாம்.

hh

மீன லக்னத்திற்கு 3-ஆம் அதிபதி சுக்கிரன் பெண் கிரகம் என்பதால், இளைய சகோதரி யோகம் சற்று பலமாக இருக்கும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்று ரிஷபம், கடகம், துலாம் போன்ற ராசிகளில் அமைந்து, செவ்வாய் பலமிழந் திருந்தால் இளைய சகோதரி யோகம் உண்டாகும். செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று பலமாக இருந்தாலும், 3-ல் சூரியன், செவ்வாய், குரு போன்ற ஆண் கிரகங்கள் அமைந்தாலும் இளைய சகோதர யோகம் உண்டாகும். சுக்கிரன், செவ்வாய் பலம் பெற்று 10-ல் அமைந்தாலும், 1, 10-க்கு அதிபதியான குரு சேர்க்கை பெற்றாலும் உடன்பிறந்தவர்களால் அனுகூலங்களும், உடன்பிறந்தவர்களுடன் கூட்டுசேர்ந்து தொழில் செய்யும் அமைப்பும் உண்டாகும்.

Advertisment

3-ஆம் வீட்டை செவ்வாய் பார்த்தாலும், சுக்கி ரனுடன் செவ்வாய் இணைந்திருந்தாலும் உடன்பிறந் தவர்கள்வகையில் அனுகூலங்கள் அதிகரிக்கும். 3-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமைந்தாலும், செவ்வாய், சுக்கிரன் 6, 8, 12-ல் மறைந்தோ, பாதக ஸ்தானமான 7-ஆம் வீட்டில் அமைந்தோ, வக்ரம் பெற்றோ இருந்தாலும் இளைய சகோதர- சகோதரி தோஷமாகும். செவ்வாய், சுக்கிரன் பலமிழந்து, சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றால் உடன்பிறந் தவர்களால் அனுகூலங்களிருக்காது. சந்திரனுக்கு 3-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமைந் தாலும் இளைய உடன்பிறப்புக்கு தோஷமாகும். சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றோ, தனக்கு நட்பு கிரகமான சனி, புதன் சேர்க்கை பெற்று பலமாக அமைந்தாலோ சொந்த முயற்சியால் பல்வேறு சாதனைகளைச் செய்யும் யோகமுண்டாகும். 3-ல் பாவிகள் இருந்தால், இளைய சகோதர தோஷமென்றாலும், 3-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், சனி, ராகு போன்ற பாவிகள் அமைந்தால், சொந்த முயற்சியால் பல்வேறு வெற்றிகளையடையும் யோகம் அமையும். 3-ஆம் வீட்டில் பாவிகள் அமைந்து, புதன் பலமிழந்தால் காதுகளில் பாதிப்புண்டாகும்.

3-ஆம் வீட்டைக்கொண்டு ஆண்களின் ஆண்மைத் தன்மை, வீரியம் பற்றி அறியலாம். மீன லக்னத்திற்கு சுக்கிரன் 3-ஆம் அதிபதி மட்டுமல்லாமல் களத்திர காரகனாகவும் இருப்பதால், சுக்கிரன் வக்ரம் பெற்றோ, சூரியனுக்கு மிக அருகில் அமைந்து அஸ்தங்கம் பெற்றோ இருந்தால் ஆண்மைக் குறைவிருக்கும்.

3-ஆம் வீட்டைக்கொண்டு கலை, இசைத்துறைகளிலுள்ள ஆர்வத்தை அறியலாம். 3-ஆம் அதிபதி கலைக்காரகன் சுக்கிரனாக வருவதால், சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், சந்திரன் சேர்க்கை பெற்றாலும், சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றுக் காணப்பட்டாலும், சந்திரன், சுக்கிரன் இணைந்து ரிஷபம், கடகம், துலாத்தில் அமைந்தாலும் கலை, இசை போன்றவற்றில் அதிக ஆர்வமுண்டாகும். பல்வேறு இசைக்கலைஞர்கள் மீன லக்னத்தில் பிறந்தவர்கள்தான்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001