Skip to main content

வலிமை அப்டேட் விட்ட யுவன்சங்கர் ராஜா!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

yuvan

 

நடிகர் அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கரோனா நெருக்கடி காரணமாக படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டது. கரோனா நெருக்கடி நிலை தளர்வுக்குப் பிறகு, வலிமை படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிக்கும் 'தளபதி 65' படம் குறித்து நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூரிடம் வலிமை படம் தொடர்பாக ஏதேனும் அப்டேட் கொடுங்கள் எனச் சமூக வலைதளம் வாயிலாகக் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, நடிகர் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 

அந்த அறிக்கையில், "வலிமை படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் எனக் கடுமையாக உழைக்கும் திரு. அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பளருமான திரு.போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து வலிமை படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும். அவர்களது முடிவிற்கு மதிப்பு தரவும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வலிமை படத்தின் இசைப் பணியை மேற்கொண்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதையே அப்டேட்டாக எடுத்துக்கொண்டு அஜித் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த U1!

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

பரக

 

'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி தொடர்பாக புகழ்ந்து எழுதியிருந்தார். அதில், "  மேக் இன் இந்தியா திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும்,  இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் சமூக வலைத்தளங்களில் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, அண்ணாமலை உள்ளிட்ட சில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இன்று , "கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு இடையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் யுவனின் பதிவுகளை ஷேர் செய்து வருகிறார்கள். சமூக வலைதளங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது யுவன் ஆக்கரமித்துள்ளதாக அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். 

 

 

Next Story

"யுவன் சங்கர் ராஜா கருப்பு என்றால், நான் அண்டங்காக்கா கருப்பு.." - அண்ணாமலை தடாலடி

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

jk


'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் கருத்துக்கு பலரும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, அண்ணாமலை உள்ளிட்ட சில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இன்று காலை, "கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு இடையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை , " யுவன் அண்ணா கருப்பு சட்டை அணிந்து கருப்பு திராவிடன் என்று தெரிவித்துள்ளதாக கூறுகிறீர்கள். என்னைவிட கருப்புத் தமிழன், கருப்பு திராவிடன் யாருமில்லை. அவரை விட நான் கருப்பு. அவர் சாதாக் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா கருப்பு. இது தொடர்பான கேள்விக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்" என்றார்.