Skip to main content

“அவற்றையெல்லாம் கடக்க 'இஸ்லாம்' உதவியது...” -யுவன் சங்கர் ராஜா!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

yuvan

 

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் 'வலிமை' படத்தில் பணியாற்றி வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார் யுவன்.

 

அதில், அஜித் குறித்தும் விஜய் குறித்தும் கேள்விகள் யுவன் சங்கர் ராஜாவிடம் கேட்கப்பட்டது. மேலும், 'வலிமை' படத்தின் பின்னணி இசைக்கான வேலை போய்க் கொண்டிருந்தது. கரோனா ஊரடங்கால் தாமதமாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

 

யுவனிடம் ரசிகர் ஒருவர், “அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பயம் என்ன? நீங்கள் அதை எப்படிக் கடந்தீர்கள்?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள யுவன், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்ததுண்டு. ஆனால் அவற்றையெல்லாம் கடக்க எனக்கு இஸ்லாம் உதவியது” என்று தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2014ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். மேலும், தனது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக்கொண்டார். 2015ஆம் ஆண்டு இஸ்லாமிய பெண் ஷாஃப்ரூன் நிஷா என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த U1!

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

பரக

 

'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி தொடர்பாக புகழ்ந்து எழுதியிருந்தார். அதில், "  மேக் இன் இந்தியா திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும்,  இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் சமூக வலைத்தளங்களில் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, அண்ணாமலை உள்ளிட்ட சில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இன்று , "கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு இடையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் யுவனின் பதிவுகளை ஷேர் செய்து வருகிறார்கள். சமூக வலைதளங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது யுவன் ஆக்கரமித்துள்ளதாக அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். 

 

 

Next Story

"யுவன் சங்கர் ராஜா கருப்பு என்றால், நான் அண்டங்காக்கா கருப்பு.." - அண்ணாமலை தடாலடி

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

jk


'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் கருத்துக்கு பலரும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, அண்ணாமலை உள்ளிட்ட சில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இன்று காலை, "கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு இடையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை , " யுவன் அண்ணா கருப்பு சட்டை அணிந்து கருப்பு திராவிடன் என்று தெரிவித்துள்ளதாக கூறுகிறீர்கள். என்னைவிட கருப்புத் தமிழன், கருப்பு திராவிடன் யாருமில்லை. அவரை விட நான் கருப்பு. அவர் சாதாக் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா கருப்பு. இது தொடர்பான கேள்விக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்" என்றார்.