Skip to main content

"அப்படிப்பட்ட மகான் அருளால் வல்லமை பெற்ற ஒரு இளைஞன்...."- நடிகர் தேஜா சஜ்ஜா பேச்சு! 

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

"A young man empowered by such great grace...."- actor Teja Sajja speech!

 

படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக 'ஹனு-மேன்' தயாராகி இருக்கிறது. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு அதில் நடித்த நாயகன் தேஜா சஜ்ஜாவுடன், பிரசாந்த் வர்மா இணைந்திருக்கும் இரண்டாவது படம் 'ஹனு-மேன்'. அமிர்தா ஐயர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

 

'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட கதா நாயகன் தேஜா சஜ்ஜா பேசுகையில், ''அனுமனின் சிறிய மந்திரத்தை பாடிவிட்டு, பேச தொடங்குகிறேன். ''மனோஜவம் மருததுல்யவேகம்.. ஜிதேந்திரியம் புத்தி மதம் வரிஷ்டம்... வதத்மஜம் வானராயுத முக்யம்... ஸ்ரீ ராமதூதம் சிரஸ நாமானி..'. அனுமனை விட பெரிய சூப்பர் ஹீரோ நம்மிடம் இருக்கிறாரா..?.இந்த ஸ்லோகத்தின் பொருள் என்னவெனில், ''மனம் மற்றும் காற்றைப் போல வேகமானவர். புலன்களின் தலைவன். சிறந்த ஞானம், கற்றல் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றால் குறிப்பிடத்தக்கவர். அவர் வாயு பகவானின் மகன். குரங்குகளின் தலைவன். ஸ்ரீ ராமரின் தூதருக்குத் தலை வணங்குகிறேன்'' எனப் பொருள்.

 

இந்த தலைமுறை இளைஞர்களுக்கு ஸ்பைடர் மேனும், பேட்மேனும்தான் சூப்பர் ஹீரோக்கள். ஏனென்றால் நாம் அவர்களை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் நமது கலாச்சாரத்தாலும் நமது அனுமனாலும் ஈர்க்கப்பட்டனர். அவர்களின் சூப்பர் ஹீரோக்கள் கற்பனையால் உருவாக்கப்பட்டவர்கள். ஆனால் அனுமன் நமது அசலான நாயகன். நமது கலாச்சாரம், நமது வரலாறு, ஹனுமன் எங்களது சூப்பர் ஹீரோ. அப்படிப்பட்ட மகான் அருளால் வல்லமை பெற்ற ஒரு இளைஞன் என்ன செய்வான் என்பதே இப்படத்தின் கதை.

 

இந்த கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்த இயக்குநரின் நம்பிக்கைக்கு என்னால் நன்றி என்ற ஒற்றை சொல் மட்டும் சொல்வது போதாது. இது நாங்கள் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படைப்பு. பிரசாந்த்- ஒரு நுட்பமான படைப்பாற்றல் கொண்ட கலைஞர். படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய விசயங்களை அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

நேர்மையுடனும், பணிவுடனும் இந்த படைப்பினை உருவாக்கி இருக்கிறோம். அனுமன் பணிவானவர். நேர்மையானவர். ஆனால் அவர் வலிமையானவர். எங்களது படமும் அப்படித்தான். நாங்கள் இதை பணிவாகவும், நேர்மையுடனும் உருவாக்கினோம். அதனால் இது வலுவுள்ள படைப்பாக இருக்கும். மேலும் இந்தத் திரைப்படம் பார்வையாளின் கண்களுக்கு அழகான காட்சி விருந்தாக அமையும் என நாங்கள் நம்புகிறோம்.

 

எங்களின் தயாரிப்பாளர் சினிமா மீதுள்ள ஆர்வத்தாலும், இந்த கதை மீது கொண்டுள்ள துணிச்சலான நம்பிக்கையாலும் எங்களை ஆச்சரியப்படுத்தினார். திரைத்துறை மீது தீவிர பற்றுடைய இவரைப் போன்ற தயாரிப்பாளர் பிரம்மாண்டமான வெற்றியை பெற வேண்டும் என நான் முழு மனதுடன் விரும்புகிறேன். விரைவில் அவர் ஒரு நட்சத்திர தயாரிப்பாளராக மாறுவார் என்றும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

 

அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், கெட்டப் ஸ்ரீனு, வினய் ராய் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர். நான் இந்த திரைப்படத்தில் நன்கு நடிப்பதற்கு முயற்சி செய்தேன். அனைத்தும் நேர் நிலையாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது பாக்கியம் என்று நம்புகிறேன். விரைவில்  திரையரங்குகளில் சந்திப்போம் '' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

லியோ வெற்றி விழா; இறுதி நேரத்தில் விஜய் எடுத்த திடீர் முடிவு

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Leo Victory Festival; Vijay's decision to avoid crowds of fans

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

 

இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிலையில் மாலை 7 மணிக்கு மேல் விழா தொடங்கவுள்ளது. விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொள்கிறார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரங்கத்தின் வெளியில் மதியம் முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவில் இருந்தும் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.

 

மேலும் பல்வேறு நிபந்தனைகளுடன்  5 கட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள 6 மணிக்கு விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் கூட்டம் இதனால் அதிகரிக்கும் என இன்று மாலை 3 மணிக்கே அவர் ரகசியமாக கார் ஒன்றில் நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

“அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” - லியோ வழக்கறிஞர்கள் குழு பேட்டி

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

 'There is hope of getting permission for the 7 am show'-Leo's lawyers team interviewed

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில் லியோ திரைப்படத் தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்கள், சென்னையில் உள்ள உள்துறை செயலாளர் அமுதாவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். லியோ திரைப்படத்திற்கு காலை 7:00 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு 'செவன் ஸ்க்ரீன்' பட நிறுவன வழக்கறிஞர்கள் வேலூர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உள்துறை செயலாளர் அமுதாவை சந்தித்துள்ளனர்.

 

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்கள் குழு தெரிவிக்கையில், ''இப்பொழுது எங்களுக்கு தேவை ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்று சொல்லி இருந்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால் ஷோவின் டைமிங் மென்ஷன் பண்ணியதால் சிக்கலாகிறது. முதல் ஷோ 9 மணி என மென்ஷன் பண்ணியதால் ஒன்பதில் இருந்து ஒன்றரை மணியில் எங்களால் எதுவும் பண்ண முடியாது. அதனால் கால இடைவெளி பத்தாது என்று சொல்லித்தான் மனு கொடுத்துள்ளோம்.

 

 'There is hope of getting permission for the 7 am show'-Leo's lawyers team interviewed

 

7 மணிக்கு ஷோ ஆரம்பிக்க அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளோம். மற்ற மாநிலங்களில் காலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி உள்ளது. பார்வையாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள். நீதிபதி அவர்கள் சொல்லும் போது குறிப்பிட்டு சொன்னார். 250 பேரை ஒரு நிமிடத்தில் வெளியே போகச் சொல்லி விரட்ட முடியாது. அதேபோல 250 பேரை உடனடியாக உள்ளே சென்று சீட்டில் உட்காருங்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் டூவீலர்களில் கார்களின் வருவார்கள். அதை பார்க் செய்துவிட்டு உள்ளே வரவேண்டும். பின்னர் திரைப்படத்தை பார்த்தவர்கள் கார், டூவீலர்களை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும். அப்படி இருசக்கர வாகனங்களை எடுத்தால் தான் அடுத்த ஷோ பார்க்க வருபவர்கள் உள்ளே வர முடியும். அதற்கான கால இடைவெளி வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். பெரியவர்கள் இருப்பாங்க, சுகர் பேஷண்ட் இருப்பாங்க. அவர்களுக்கு யூரின் ப்ராப்ளம் இருக்கும். அதற்கெல்லாம் டைம் கொடுக்க வேண்டும் அல்லவா. 5 ஷோவிற்கான அனுமதி கொடுத்தாச்சு. அதற்கான கால இடைவெளி அதிகம் வேண்டும் என கேட்கிறோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றனர்.