Skip to main content

பிக்பாஸ் யாஷிகாவுடன் பாவாடை தாவணியில் யோகிபாபு !

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

காமெடி நடிகர் யோகி பாபு நாயகனாக 'ஜாம்பி' படத்தில் ஆன்லைன் மற்றும் யூடியூப் பிரபலங்களுடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி கதை, ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

 

yogibabu

 

இப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், 'பிஜிலி' ரமேஷ், ஜான் விஜய், 'லொள்ளு சபா' மனோகர், சித்ரா அக்கா உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒரு  பாடல் தவிர படத்தின் படப்பிடிப்பு அனத்தும் முடிவடைந்தது. கடைசி கட்ட படப்பிடிப்பில் பெண் வேடமிட்டு யோகிபாபு நடித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. படத்தின் பெரும் பகுதியை ஈசிஆரில் உள்ள விடுதியைச் சுற்றி எடுக்கப்பட்டு வருகிறது. பிரேம்ஜி அமரன் இசையில், புவன் நல்லான் ஆர் இயக்கத்தில் உருவாகும் இப்படம் கோடையின் மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வசந்த் மகாலிங்கமும், வி.முத்துக்குமாரும் இப்படத்தை தயாரிக்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முரட்டு சிங்கிள் பக்கத்தில் அமர்ந்த யாஷிகா ஆனந்த்... கோதாவில் குதித்த ரசிகர்கள்!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதையும் தாண்டி தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்.இந்நிலையில் தற்போது ஜாம்பி படத்தில் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் நடித்துள்ள படம் என்பதால் ஜாம்பி படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருப்பதாகவும் கூறியுள்ள யாஷிகா, இந்த படத்தில் மருத்துவ மாணவியாக நடித்திருப்பதோடு சண்டைக் காட்சியிலும் நடித்திருப்பதாக கூறினார். ரசிகர்களுடன் மக்களுக்கு உதவி செய்ததாக கூறிய அவர், நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றும் அதன் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் எனவும் கூறினார்.
 

cb



இந்த விழாவில் நடிகர் பிரேம்ஜியும் கலந்துகொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த டீஷர்ட் பலரின் கவனத்தை ஈர்த்தது. அதாவது அந்த டீ ஷர்ட்டில் முரட்டு சிங்கிள் என அச்சிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரேம்ஜி அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த படத்தின் நாயகி யாஷிகா அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தார். அதுதான் தற்போது ஹாட் டாப்பிக்காக இணையத்தில் பேசப்படுகிறது. மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்துள்ள நீங்கள் எப்படி எங்கள் தலைவர் (பிரேம்ஜி) அருகில் அமரலாம் என்று அவரிடம் டுவிட்டரில் செல்ல சண்டை போடுகிறார்களாம் பிரேம்ஜி ரசிகர்கள். இருவருமே தங்களின் டுவிட்டர் பக்கங்களில் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

இந்த படத்திற்காக மேக்கப் போட எவ்வளவு நேரம் ஆச்சி தெரியுமா...? - பிக்பாஸ் யாஷிகா 

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

S3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது இப்படத்தின் நாயகி யாஷிகா ஆனந்த் இப்படம் குறித்து பேசும்போது...

 

yashika

 

 

''நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் ஒளிப்பதிவாளரின் பணி தான் முக்கியமானது. அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு கோணத்திலும் கேமராவை வைத்து கடினமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு கே.எஸ். அதேபோல் நடன இயக்குநர் எனக்கேற்றவாறு நடனம் அமைத்துக் கொடுத்தார். இரவு பகலாக படப்பிடிப்பு நடக்கும். இருப்பினும் அனைவரும் ஒரு குடும்பம் போல பணியாற்றினோம். மேக்கப் போடுவதற்கு மட்டும் 3 மணி நேரம் ஆகும். எனக்காக பொறுமை காத்து மேக்கப் போட்டதற்கு மேக்கப் மேனுக்கு நன்றி'' என்றார்.