Skip to main content

யோகி பாபு மீது புகார்

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

yogi babu producer money fraud issue

 

சென்னை வளசரவாக்கம் பகுதியில் 'ரூபி பிலிம்ஸ்' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர் முகமது ஹாசிர். வண்டி, கன்னிமாடம், மங்கி டாங்கி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். 

 

இந்நிலையில் யோகி பாபு மீது ஹாசிர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரில், கடந்த 2020ஆம் ஆண்டு 'ஜாக் டேனியல்' என்ற தலைப்பில் ஒரு படத்தை தொடங்கியதாகவும் அதில் யோகி பாபுவை நடிக்க வைக்க ரூ. 65 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு முன்பணமாக ரூ. 20 லட்சம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கியதும் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை என்றும் படப்பிடிப்பிற்காக அழைத்தாலும் வராமல் ஏமாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

 

பின்பு முன்பணத்தை யோகிபாபுவிடம் கேட்டால் அதைத் திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளதாகவும் ஹாசிர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மஞ்சும்மெல் பாய்ஸ் போல அல்ல... சல்யூட் சார்” - யோகி பாபு புகழாரம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
yogi babu appreciate prithviraj aadujeevitham

மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடு ஜீவிதம்’ நாவல் அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலி மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து இந்தியா வந்தார் என்பதை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.

சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அந்த வகையில் தற்போது, யோகி பாபு இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

yogi babu appreciate prithviraj aadujeevitham

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “இன்னும் படத்தின் தாக்கத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. அந்த வலி நிறைந்த பயணம். இப்படம் சினிமா பிரியர்களுக்கு விருந்து. இது மஞ்சும்மெல் பாய்ஸ் போல சீட் நுணியில் பார்க்கும் சர்வைவல் த்ரில்லர் அல்ல. இது ஒரு எமோஷனல் சர்வைவல் டிராமா. அதனால் அதற்கு தகுந்த வேகத்தில் நகரும். பிரித்விராஜ் சார் இந்த படத்தின் உயிர். மம்மூட்டி, மோகன்லால் நடிகர்களுக்கு பிறகு பிரித்விராஜுடைய நடிப்பு இன்னும் பல வருடங்கள் மறக்க முடியாததாக இருக்கும். உங்களுடைய கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்புக்கும் சல்யூட் சார்” என குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே மாதவன், ஒளிப்பதிவாளர் ரவி.கே சந்திரன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். அவர்களுக்கு பிரித்விராஜ் நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

“உண்மைக்குப் புறம்பானது” - ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
producer abdul malik jaffar sadiq case issue

மலேஷியாவை சேர்ந்தவர் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராக இருந்து வருகிறார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல்வேறு மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையைப் பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது.

இந்த நிலையில் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டதாக காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்குக்கும்  தனக்கும் தொடர்பு உண்டு என்று பிரபல யூட்யூப் சேனல் உண்மைக்குப் புறம்பாக அவதூறு செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் 5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.