yogi babu new movie update

இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகிபாபு நடிப்பில் ஒரு படம் உருவாகும் வருகிறது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், யோகி பாபு நாயகனாக நடிக்க லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஆர் ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இப்படம் குறித்து யோகி பாபு கூறுகையில், “சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாவின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள் . அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன்நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாகும். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்" என்றார்.

Advertisment