Skip to main content

யோகி பாபுவுக்கு திருநீர் இட்ட புதுச்சேரி முதல்வர்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

yogi babu meets pudhucherry cm

 

தமிழைத் தாண்டி இந்தியில் 'ஜவான்', மலையாளத்தில் 'குருவாயூர் அம்பல நடையில்', தெலுங்கில் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் யோகிபாபு. இதனிடையே ஹீரோவாக ஏகப்பட்ட தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். அவர் ஹீரோவாக நடித்த லக்கிமேன் கடந்த 1ஆம் தேதி வெளியானது. ஜவான் வருகிற 7ஆம் தேதி வெளியாகிறது. 

 

திரைப்படங்களைத் தாண்டி கோவில்களுக்கு அடிக்கடி சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் யோகி பாபு, இன்று புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். இதற்காக புதுச்சேரிக்கு சென்ற யோகி பாபு, கும்பாபிஷேகத்தை முடித்தவுடன் சட்டப் பேரவைக்கு வந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு புறப்பட்டார். அப்போது யோகி பாபுவுக்கு திருநீர் இட்டு, ரங்கசாமி வாழ்த்தினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.  .

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'சட்னி - சாம்பார்'  சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக்!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Chutney Sambar Series first look

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார், நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. 

தமிழ் திரையுலகில் 'மொழி' திரைப்படம் முதலாக, அழுத்தமான அதே நேரம் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய  தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் 'சட்னி-சாம்பார்' சீரிஸ் உருவாகியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த சீரிஸ் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 

நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார்.  ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,  இந்த வெப் சீரிஸ் எத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பதை மிகத்தெளிவாக சொல்லும்படி அமைந்துள்ளது.  போஸ்டரில் யோகி பாபு ஒரு டைனிங் டேபிளின் மையத்தில், அவரது அப்பாவி முகத்துடன்  அமர்ந்திருக்கிறார், அவரைச் சுற்றிப் புன்னகை ததும்ப  மற்ற நடிகர்கள் அனைவரும் அருகில் இருக்கின்றனர்.

இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.இந்தத் சீரிஸில் நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். 

'சட்னி-சாம்பார்' சீரிஸிற்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிப் புகழ் பெற்ற அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார். 'சட்னி-சாம்பார்' சீரிஸை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ்  பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

Next Story

பக்ரீத் பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Bakrit festival; Greetings leaders

பக்ரீத் பண்டிகை நாளை (17.06.2024) கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில், “பக்ரீத் பண்டிகை என்பது உலகெங்கிலும் உள்ள இசுலாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தியாகம், இரக்கம் நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இது போன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி, நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன. பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்தப் புனிதமான நாளில் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கருணையும் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று கூறி. அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “உலகத்தில் உள்ள அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், அன்பு ஆகியவற்றைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை தியாகத்தை போற்றுகிற நாளாகும். 

Bakrit festival; Greetings leaders

இந்திய அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கியிருக்கிற உரிமைகளை பறிக்கிற வகையில் 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி செயல்பட்டு வந்தது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும், ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பாதுகாவலனாக காங்கிரஸ் பேரியக்கமும், தலைவர் ராகுல்காந்தி அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் இஸ்லாமிய சமுதாயத்தினரின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலளார் டிடிவி தினகரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும்  இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனுக்கு இணை ஏதுமில்லை எனக்கூறி இறைவனின் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டு வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையின் மேன்மையைப் போற்றுவதே இந்த பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். 

Bakrit festival; Greetings leaders

இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இறைதூதரின் புனிதத்தையும், அரும்பெரும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் இந்நாளில் சாதி, மத மற்றும் இன வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.