/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/155_27.jpg)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் 25 நாளை கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. வினோத் குமார் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் கடந்து வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த படத்தின் இந்தி பதிப்பை வெளியிடுவதற்கு தணிக்கை குழு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக ஒரு பரபரப்பு புகாரை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் சிபிஐ தணிக்கை குழு அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த படத்தை அடுத்து தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடந்து வருகிறது.
அப்போது எம்.குமாரசக்கனாபுரம் ஊராட்சி மக்கள் விஷாலை சந்தித்து, குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக சொன்னார்கள். உடனே விஷால், பொதுமக்கள் முழுமையாகப் பயன்பெறும் வகையில் 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுத்தார். இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.
இந்த நிலையில் யோகிபாபு தனக்கு முருகன் சிலை ஒன்றை பரிசளித்துள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நடந்த படப்பிடிப்பின் போது யோகிபாபு தனக்கு அளித்துள்ளதாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கடவுளே பரிசைக் கொடுத்துஅனுப்பியது போல்உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)