Skip to main content

மருமகனுக்காக அஜித் பட இயக்குநருடன் கைகோர்த்த ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

Xavier Britto

 

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளிக்கும், ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு, ஆகாஷ் முரளி திரைத்துறையில் அறிமுகமாகும் திட்டத்தில் இருப்பதாகவும், அதற்கான முயற்சியை சேவியர் பிரிட்டோ எடுத்து வருவதாகவும் தகவல்கள் பரவின.

 

இந்தநிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார். இப்படத்தை நடிகர் அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளார். படத்தில் பணிபுரியவுள்ள பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் முறையாக இணைந்த அதர்வா - அதிதி

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
atharvaa aditi shankar movie update

அதர்வா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தகம் வெப் தொடர் வெளியானது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனிடையே அட்ரஸ், தணல், நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இப்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கும் 'டிஎன்ஏ' படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், அதர்வா நடிக்கும் புதுப் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம். ராஜேஷ் இயக்கும் புதுப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஸ்ரீவாரி பிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது, ​​“திரையுலகில் மிகுந்த அனுபவம் கொண்ட பி. ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது" என்றார்.

இயக்குநர் எம். ராஜேஷ் கூறும்போது, ​​“காலத்திற்கு ஏற்றாற்போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்" என்றார்.

Next Story

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய அதர்வா படக்குழு

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

atharvaa new film dna update

 

அதர்வா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தகம் வெப் தொடர் வெளியானது. இதனிடையே அட்ரஸ், தணல், நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்தநிலையில் அதர்வா, 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்', 'ஃபர்ஹானா' ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் புது படத்திற்காக கமிட்டாகியுள்ளார். 

 

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. பூஜையில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அ. வினோத் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். படத்திற்கு 'டிஎன்ஏ' (DNA) எனத் தலைப்பு வைத்துள்ளனர். பூஜையின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.