Skip to main content

ஆஸ்கர் மேடையில் கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

Will Smith slapped chris rockon Oscar stage

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக வில் ஸ்மித் பெற்றுள்ளார். இந்த படம் வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதில்  வீனஸ்-செரினா வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையாக நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்றுள்ளார்.

 

இந்நிலையில் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இவ்விழாவில் வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் முடியற்ற தலையை "ஜி.ஐ. ஜேன்" படத்தில் டெமி மூரின் தோற்றத்துடன் ஒப்பிட்டு தொகுப்பாளர் கிரிஸ் ராக் கிண்டலடித்தார். இதை கேட்ட வில் ஸ்மித் உடனே இருக்கையில் இருந்து எழுந்து ஆஸ்கர் மேடை ஏறி தொகுப்பாளர் கிரஸ் ராக்கை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதன் பின் அமைதியாக தனது இருக்கையில் அமர்ந்த வில் ஸ்மித் "என் மனைவி குறித்து இனி உன் வாயிலிருந்து வார்த்தை வரக்கூடாது" என கட்டமாக  தெரிவித்தார். இது அரங்கில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் திட்டு திட்டாக முடி உதிரும் அலோபீசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
 

Next Story

ஆஸ்கர் 2025 விருது விழா விவரம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
oscar 2025 update

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 96ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 

இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு இந்தியாவிலிருந்து மலையாளப் படமான '2018' படம் அனுப்பப்பட்டது. ஆனால், இப்படம் இறுதிப் பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியது. இதையடுத்து இந்தியாவில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு தேர்வானது. இப்படம் ஜார்க்கண்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தனது மகளுக்கு நீதிப் போராட்டத்தை நடத்திய தந்தை குறித்து எடுக்கப்பட்டதாகும். ஆனால் இப்படமும் விருது பெறவில்லை.

இவ்விருது விழாவில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் வென்று பலரது பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் 97ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி (இந்தியாவில் மார்ச் 3 ) நடக்கும் என அறிவித்துள்ளது. விருதுக்கு நாமினேஷனான பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.