publive-image

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலில் முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனிடையே இப்படத்தில், சில காட்சிகள் புத்தகத்திலிருந்து திரித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி மணிரத்னம் மீது சிலர் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இயக்குநர் சீனுராமசாமி மணிரத்னம் குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இது குறித்து சீனுராமசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எல்லோரையும் குளித்து வரச்சொன்னாய், நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய் என்றார் கலைஞர். தன் மகனுக்கு நந்தன் எனப் பெயரிட்டவர் மணிரத்னம் சார். பம்பாய் ரோஜா கன்னத்தில் முத்தமிட்டால் படங்களால் எதிர்ப்புகள் பார்த்தவர். ஜாதிக்கட்சியினர் சினிமாக்காரர்கள் அவரை சிறுமை செய்வது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment