Skip to main content

'கர்ணன்' படத்துக்காக மீம்ஸ் போட்ட விவேக்!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021
herhswg

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லால், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

அந்தவகையில் ‘படிக்காதவன்’, ‘உத்தமபுத்திரன்’, ‘வேலையில்லா பட்டதாரி’ உள்ளிட்ட படங்களில் தனுஷுடன் நடித்த நகைச்சுவை நடிகர் விவேக், ‘கர்ணன்’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘படிக்காதவன்’ ஸ்டைலில் மீம்ஸ் போட்டு சமூகவலைதளத்தில் இப்படத்தைப் பாராட்டியுள்ளார். அதில்... "எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி ப்ரோ?!?!  #கர்ணன் பட குழுவுக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்