Skip to main content

தன் படத்தின் டிக்கெட் விற்ற காசில் விஷால் செய்த காரியம் !

Published on 27/09/2018 | Edited on 27/09/2018
vishal

 

விஷால் - லிங்குசாமி கூட்டணியில் உருவாகியுள்ள 'சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விஷால் 25 விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் தேர்தெடுக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட நலிந்த விவசாயிகளுக்கு ரூ11 லட்சம் வழங்கினார். துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை படத்தின் டிக்கெட் விற்று கிடைத்த லாபத்தில் விஷால் இந்த தொகையை வழங்கியுள்ளார். முன்னதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழாவில் நடிகர் விஷால் தான் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது செய்துள்ள விஷால் மேலும் இதுகுறித்து பேசியபோது...

 

 

 

"இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும். விவசாயிகளுக்கு நம்மால் உதவ முடிகிறது என்பது மிகப்பெரிய விஷயம். நாம் 30 விவசாயிகளுக்கு உதவுவதை பார்த்து மேலும் 2 பேர் நாம் உதவியதை விட அதிகமான விவசாயிகளுக்கு உதவுவார்கள். நாம் பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது மகிழ்ச்சி. இதை போல் எல்லோரும் விவசாயிகளுக்கு உதவி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்