Skip to main content

“நீங்கள் உங்கள் சொந்த குழந்தையை அனாதை இல்லத்தில் கைவிடுவது போல இருக்கிறது”- மிஷ்கினுக்கு விஷால் பதில்

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

இன்று மாலை ஆறு மணிக்கு துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், மிஷ்கின் நீக்கப்பட்டதற்கான விளக்கத்தையும் தெரிவித்து விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

myskin vishal

 

 

இந்நிலையில் மிஷ்கினை ஏன் இப்படத்திலிருந்து நிக்கப்பட்டார் என்று விஷால் விளக்கம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “துப்பறிவாளன்2 படத்தை நானே இயக்குகிறேன். மிஷ்கினுக்கு விஷாலின் பதில். இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை 6மணிக்கு படத்தின் முதல்  தோற்றத்தை  வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் அந்த அறிக்கையில், “ஒரு இயக்குநர் திரைப்படத்தை விட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்னென்ன?

கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை 13 கோடி ரூபாய்க்கு பக்கம் செலவழித்த பின்னர்,  படத்தை விட்டு ஒரு இயக்குநர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு இயக்குனர் ஒரு திரைப்படத்திலிருந்து விலகுவது ஏன்?

ஒரு தயாரிப்பாளராக, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

படத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதாலா? இல்லை .

படத்தின் தயாரிப்பின்போது ஒரு இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர்  சுட்டிக்காட்டினால் அது தவறா?  UK-வில் 3 முதல் 4 மணிநேர படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காக சுட்டிக்காட்டிய விஷயங்களா? இல்லை.

ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் ஷூட் செய்வதற்கு பதில், செலவைக் குறைக்க, இரவு பகலாக ஷூட் செய்யலாமா என்று கேட்டால் அது தவறா? இல்லை.

நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன், ஏனென்றால், நீங்கள் உங்கள் சொந்த குழந்தையை அனாதை இல்லத்தில் கைவிடுவது போல மோசமாக இருக்கிறது.

இப்படியான தவறான செயல்களுக்குப் பிறகு,   இப்படத்தில் நான் இல்லை என்று கூறிய பிறகு, டிசம்பர் 11, 2019 அன்று படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், ஜனவரி 4, 2020 அன்று இந்தியாவுக்குத் திரும்பி, 2020 பிப்ரவரி முதல்  வாரத்தில் VFF  அலுவலகத்திற்கு வருவது ஒரு இயக்குநருக்கு சரியானதா?

திரைப்படத் தயாரிப்பின் போது ஏற்படும் ஆர்வத்தையும், தயாரிப்பாளர் சந்திக்கும் கஷ்டங்களையும் இயக்குநர் அறிந்திருக்கிறாரா?

நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், புதுமுக தயாரிப்பாளரோ, அறிமுக தயாரிப்பாளரோ, எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அவர்கள் ஷூட்டிங்கின்போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்க கூடாது என்பதற்காகத்தான்.

மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையை சந்திக்கக்கூடாது. நல்ல வேளையாக, திரைப்பட தயாரிப்பின் நுணுக்கங்களை அறிந்த பின்பு, இப்படத்தை கைவிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால், முன்னோக்கி சென்று இப்படத்தை நானே இயக்கி, என்னுடைய சிறப்பான பணிகளைச் செய்து, படத்தை வெளியிட்டு, இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டும் என்பதையும்  உறுதிசெய்கிறேன்.

இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரை கெடுப்பது அல்ல, ஆனால் இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. இது ஒரு பொதுக் கூக்குரலாக இருக்கலாம். ஆனால், அனைத்து தயாரிப்பாளர்களும் (புதிய மற்றும் பழைய தயாரிப்பாளர்கள்) விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (வி.எஃப்.எஃப்) போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு 'துப்பறிவாளன்-2'  படப்பிடிப்பின்போது என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவே என்று நினைக்கிறேன்.

இயக்குநராக அறிமுகமாக உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன்.

இன்று மாலை 6மணிக்கு படத்தின் முதல் தோற்றத்தை  வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். God Bless!” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி; பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Vijay Sethupathi directed by Mishkin; First look release

 

தமிழ் சினிமாவில் நாயகனாக ஆரம்பித்து இந்தி, தெலுங்கு சினிமாக்களில் வில்லனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாகத் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். மெரி கிறிஸ்துமஸ், விடுதலை இரண்டாம் பாகம் ஆகியவை ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

 

இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘டிரெயின்’ (Train) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த விஜய் சேதுபதி, தன்னுடைய வித்தியாசமான இயக்கத்தால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் மிஷ்கின். இவர்கள் இணைந்து ஒரு படம் உருவாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 

 

Next Story

மிரட்டும் லுக்கில் ஆண்ட்ரியா ; 'பிசாசு 2' டீசர் வெளியீடு

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

Andrea in an intimidating look; 'Pisasu 2' Teaser Released

 

தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மிஷ்கின் . இவர் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிசாசு 2' படத்தை இயக்கிமுடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

இந்நிலையில் 'பிசாசு 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. வழக்கமான மிஷ்கின் பட பாணியில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளிவந்துள்ள இந்த டீரில் வசனம் எதுவும் இடம்பெறவில்லை. ஆண்ட்ரியாவின் ஸ்கிரின் ப்ரசன்ஸ் பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.