Vimal's explanation for director Aamir's criticism!

விமல் - தன்யா ஹோப் நடிப்பில் ‘குட்டிபுலி’ சரவண சக்தி இயக்கத்தில் விஜய் சேதுபதி வசனத்தில் உருவாகியுள்ள படம் ‘குலசாமி’. இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு இப்படத்தின் நடிகர்விமல் வராதது வருத்தமளிப்பதாகப் பேசினார்.

Advertisment

இது குறித்த கேள்வியை பத்திரிகையாளர் சந்திப்பின் போது கேட்டபோது விமல் பேசியதாவது “விலங்கு வெப்சீரிசுக்கு பிறகு நல்ல படைப்புகளுக்கு முக்கியத்துவம் தந்து நடிக்கிறேன். முழுக்க நகைச்சுவையான, முழுக்க முழுக்க சீரியசான போன்ற தரத்தில் படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். என்னுடைய படமான ‘குலசாமி’ டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வராமல் போனதற்கு இயக்குநர் அமீர் அண்ணனிடம் என்ன காரணம் என்று பேசிவிட்டேன். எம்ஆர்சி நகரில் தெய்வ மச்சான் படத்தின் நிகழ்ச்சி அதே நாளில் அதே நேரத்தில் நடந்தது. அந்த படக்குழு 20 நாட்களுக்கு முன்னரே என்னுடைய தேதியை வாங்கி விட்டார்கள். இதுதான் காரணம். இது குறித்து படக்குழுவிடம் சொன்னேன்; அவர்கள் இயக்குநர் அமீர் அண்ணனுக்கு சொல்லாமல் விட்டு விட்டார்கள். நானும் அவரை தொடர்பு கொண்டு விளக்கம் அளித்துவிட்டேன்” என்றார்.

Advertisment