Skip to main content

விமல் நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

cacC

 

நடிகர் விமல் மற்றும் 'குட்டிப்புலி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவணசக்தி ஆகியோர் இணையும் புதிய படம் பூஜையுடன் இன்று துவங்கியது.

 

எம்.ஐ.கே ப்ரொடக்ஷன் சார்பாக பி.இளையராஜா தயாரிக்கும் இந்தப் புதிய படத்தை எழுதி இயக்குகிறார் குட்டிப்புலி சரவண சக்தி. இவர் ஏற்கெனவே ஜே.கே. ரித்திஷ் நடித்த 'நாயகன்', ஆர்.கே சுரேஷ் நடித்த 'பில்லாபாண்டி' ஆகிய படங்களை இயக்கியவர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகியாக 'தடம்', 'தாராள பிரபு' படங்களின் நாயகி தான்யா ஹோப் நடிக்கிறார். மற்ற நடிகர்களின் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது. இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"கடைசி விவசாயி போல் இப்படம் இருக்கும்" - பேரரசு

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

perarasu speech in Badava Audio Launch

 

நடிகர்கள் விமல் மற்றும் சூரி நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்துள்ள படம் 'படவா'. இசையமைப்பாளர் ஜான் பீட்டர் ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் என்ற பேனரில் இப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார். கே.வி. நந்தா இயக்கும் இப்படத்தில், ஸ்ரீதா கதாநாயகியாகவும், 'கேஜிஎஃப்' புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். 

 

இயக்குந‌ர் பேரரசு பேசியதாவது, "நடிகர் விமல் வெற்றி அடைந்துகொண்டே இருக்க வேண்டும். 'படவா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் விவசாயத்தை பற்றியது. 'கடைசி விவசாயி' தேசிய விருது பெற்றது, டிரைலரை பார்க்கும் போது அதுபோன்ற திரைப்படமாகத் தான் 'படவா' இருக்கும் என்று தோன்றுகிறது" என்றார். 

 

விஜய் ஆண்டனி பேசியதாவது, "ஜான் பீட்டர் மற்றும் கதாநாயகன் விமலுக்கும் வணக்கம். கண்டிப்பாக நீங்கள் பெரிய உயரத்தை தொடுவீர்கள். கதாநாயகன் விமல் நடிகர் சூரி சார் காம்போ நன்றாக இருக்கும். இது நல்ல திரைப்படமாக கட்டாயம் அமையும்." என்றார். 

 


 

Next Story

"45 நாள் ஆச்சு; உண்மையிலேயே நானும் மாறிவிட்டேன்" - விமல்

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

vimal speech at Thudikkum Karankal Audio Launch

 

வேலு தாஸ் இயக்கத்தில் அண்ணாதுரை தயாரிப்பில் விமல், மிஷா நரங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'. ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.  

 

அப்போது விமல் பேசுகையில், "நிறைய பேரு படமே வரமாட்டேங்குதுனு சொல்றாங்க. ஆண்டவன் புண்ணியத்தில் இப்போது நிறைய படம் நடிச்சிகிட்டு வரேன். கையெழுத்து போடுறதில்லை. அதனால் இனிமேல் நிறைய படங்கள் வரும். சினிமாவுக்கு வந்த புதுசில் நீட்டின இடத்தில எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டேன். அதை முடிக்க 6 வருஷம் ஆச்சு. லாக்டவுன் சமயத்தில் இப்படம் தான் எனக்கு கைகுடுத்துச்சு. அதனால் இப்படம் எனக்கு ஒரு ஸ்பெஷல். 

 

ரோபோ ஷங்கர் 6 மாசமா உடல் நிலை சரியில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டு சொன்னார். அந்த நேரத்தில் எனக்கே சங்கடமாக இருக்கும். அவரோடு ஃபோன் கூட பேசமாட்டேன். ஆனால் அவரை பற்றி அவரது வீட்டில் விசாரிப்பேன்" என்றார். உடனே மேடையில் இருந்த ரோபோ ஷங்கரை பார்த்து, "மாமா...நீங்க கவலைபடாதீங்க. நீங்க ஒரு பல்கலைக்கழகம். உங்களை பார்த்து பல பேர் திருந்திருக்காங்க. உடலை கட்டுப்பாடுடன் வைத்து கொள்வதில் ஆர்வமாக இருக்காங்க" என்றார். 

 

பேசி முடித்துவிட்டு மேடை இருக்கையில் அமர்ந்த விமலிடம், பல பேர் மாறிவிட்டார்கள் என சொல்றாங்க, ஆனால் உங்களை பற்றி சொல்லவில்லையே.. என கேட்க, திருப்பியும் மைக் அருகில் வந்த விமல், "45 நாள் ஆச்சு. உண்மையை தான் சொல்கிறேன். நானும் மாறிவிட்டேன்" என்றார்.