/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/112_12.jpg)
நடிகர் விக்ரம் நடிப்பில், பிரமாண்டமாக உருவாக இருந்த படம் ‘மகாவீர் கர்ணா’. இயக்குநர் ஆர்.எஸ்.விமல் இப்படத்தை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிட்டிருந்தார். இவர், மலையாளத்தில் வெளியான மாபெரும் வெற்றிப்படமான ‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற படத்தை இயக்கியவர் ஆவார். மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில், திடீரென நிறுத்தப்பட்டது. இது குறித்து எந்த விளக்கமும் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படமால் இருந்தது. அதனைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா' உள்ளிட்ட படங்களின் விக்ரம் நடிக்கத் தொடங்கினார். இந்த நிலையில், இப்படத்தில் இருந்து விக்ரம் விலகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், இப்படம் கைவிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பிரபல இந்தி நடிகரை வைத்து இப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)