Skip to main content

"அந்நியன் படத்தில் பயணித்ததை மறக்கவே முடியாது" - சினிமா பிரபலம் மறைவுக்கு விக்ரம் இரங்கல்

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

vikram condolence message of dubbing artist Srinivasa Murthy passed away

 

தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற டப்பிங் ஆர்டிஸ்ட்டாக வலம் வந்தவர் ஸ்ரீனிவாச மூர்த்தி. ஷாருக்கான், மோகன்லால், விக்ரம், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் தெலுங்கு பதிப்பிற்கு குரல் கொடுத்து பிரபலமான இவர் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். 

 

ஸ்ரீனிவாச மூர்த்தி, நேற்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் சூர்யா, "இது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய இழப்பு. தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது ஸ்ரீனிவாச மூர்த்தியின் குரல் மற்றும் எமோஷன்ஸ் தான். உங்களை மிஸ் செய்வேன்." என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் நடிகர் விக்ரம் தற்போது இரங்கல் பதிவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நண்பர் ஸ்ரீனிவாச மூர்த்தியின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது காந்தக் குரல் தெலுங்கில் எனது கதாபாத்திரங்களுக்கு நம்பகத்தன்மையும் அழகையும் அளித்தது. குறிப்பாக எங்கள் அந்நியன் பட பயணத்தை என்னால் மறக்கவே முடியாது. இது எப்போதும் அன்புடன் நினைவில் இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.  

 

மற்றொரு பதிவில், ஒரு நிகழ்ச்சியில் அந்நியன் படத்துக்கு ஸ்ரீனிவாச மூர்த்தி டப்பிங் பேசும் காணொளியை பகிர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூஜையுடன் தொடங்கிய ‘பைசன்’ படப்பிடிப்பு (புகைப்படங்கள்)

Published on 06/05/2024 | Edited on 06/05/2024

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது. இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இனைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருவதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகுவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. போஜை விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினராக விக்ரமும் கலந்து கோண்டார். மேலும் கிளாப் போர்டு அடித்து படப்பிடிப்ப தொடங்கி வைத்தார்.   

Next Story

“உடல் ஓய்வுறுக, புகழ் நின்று நிலவுக” - வைரமுத்து இரங்கல்

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
vairamuthu condolence to shanmuganathan passed away

பிரபல தமிழ் நாளிதழில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன்(வயது 90) முதுமை காரணமாக இன்று (03-05-2024 ) காலை 10.30 மணிக்கு காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் நாளை (04-05-2024) காலை 8 மணி அளவில் சென்னை முகப்பேரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது கொடுக்கப்பட்டது.  

இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சண்முகநாதன் மறைவு தமிழ் இதழியல் உலகுக்குப் பெரும் இழப்பாகும்” எனக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். 

இதனிடையே, கவிஞர் வைரமுத்து, அவரது எக்ஸ் தளத்தில், “முதுபெரும் பத்திரிகையாளர். 70 ஆண்டுகளை இதழியல் துறைக்கே அர்ப்பணித்தவர். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரால் வார்க்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். அவர் மறைவு பத்திரிகைத் துறையின் கட்டைவிரல் ஒடிந்ததுபோல் வலிக்கிறது. தினத்தந்திதான் அவருக்குக் குடியிருந்த கோயில் தான்பெற்ற கல்வி, எழுத்தாற்றல் உடல்வலிமை எல்லாவற்றையும் பத்திரிகைத் துறைக்கே பயன்படுத்தியவர்.

தினத்தந்தியின் மொழிநடையை முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளுள் ஒருவர் பல படைப்புகளைப் படைத்த நாவலாசிரியர் 'வரலாற்றுச் சுவடுகள்' என்ற அழிக்கமுடியாத ஆவணத்தின் ஆசிரியர். அவர் எழுதிய 'உலக வரலாறு' மரணத்தை வெல்வதற்கு அவர் படைத்துக்கொண்ட பனுவல் ஆகும். தமிழக அரசின் கலைஞர் எழுதுகோல் விருதுபெற்ற பெருமை பெற்றவர். என்னை வளர்த்தவர்களுள் அவரும் ஒருவர். அவர் உடல் ஓய்வுறுக, புகழ் என்றும் நின்று நிலவுக ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.