Skip to main content

விக்ரமுடன் ஜோடி சேரும் சிம்ரன்... படப்பிடிப்பு தொடக்கம்!

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

vikram

 

‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள விக்ரம், அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக 'சீயான் 60' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லலித் தயாரிக்கிறார். 

 

விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் இருவரும் முதல்முறையாக இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர். விக்ரமிற்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்க உள்ளார். மேலும், நடிகை வாணி போஜன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பானது இன்று (10.03.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளது. இத்தகவலை, தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

'சீயான் 60' படத்திற்காக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அனிருத், தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருவதால் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து, புதிய இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்