Skip to main content

சிவகார்த்திகேயன் இயக்குனருடன் கைகோர்த்த விஜய்சேதுபதி! 

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

vzdsvzd

 

நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘துக்ளக் தர்பார்’, ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ படங்களின் இயக்குநர் பொன்ராம் இயக்கவுள்ளார். விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் அறிமுக ப்ரோமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூகவலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் மற்ற நடிகர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜய் சேதுபதியின் 46வது படமாக அமைவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்