Skip to main content

"நீங்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கும் மக்களுக்காக எழுந்து பாடுங்கள்" - அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை! 

Published on 21/08/2020 | Edited on 21/08/2020
vjvj

 

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இதையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி நேற்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார். இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வீடுகள், கோயில்கள் என அனைத்திலுமே எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தார்கள். 

 

இந்நிலையில் இந்த கூட்டுப் பிரார்த்தனை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கரோனா விழிப்புணர்வுக்காக எஸ்.பி.பி பாடிய பாடல் விடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில்...

 

"அன்புள்ள எஸ்.பி.பி,

உங்கள் பாடல் முதல் வரிசையில் நின்றுகொண்டு, கரோனாவிற்கு எதிராக போராடும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உத்வேகத்தை உயர்த்துகிறது. உங்களின் பாராட்டு மற்றும் நன்றி வார்த்தைகள் மன உறுதியை உயர்த்துகிறது. நீங்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கும் கோடிக்கணக்கான மக்களுக்காக எழுந்து பாடுங்கள். உங்கள் உயிர்த்தெழுதலுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
nn

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

அதேபோல் விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமான வரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரனையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் மீதான குட்கா வழக்கும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு அதிமுக போகவில்லை என்பதால் எங்களை பயம் காட்ட இதுபோன்ற சோதனைகளை பாஜக அரசு செய்து வருகிறது. இது பாஜகவின் இயலாமையைக் காட்டுகிறது என்கின்றனர் அந்த பகுதி ர.ரக்கள்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
The case against former minister C. Vijayabaskar has been adjourned

அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். மேலும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிக்கையில் இணைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை 10:30 மணி அளவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.