/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajni-vijay.jpg)
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு, நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடி வந்தார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இதனிடையே, தெலுங்குதிரையுலகில் பிரபலங்களுக்கு இடையே #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்து செல்ல வேண்டும். இந்த சேலஞ்சை தெலங்கானா சட்டமன்ற அமைச்சர் சந்தோஷ் என்பவர் தொடங்கி வைத்தார். நடிகை சமந்தாவிடம் தொடங்கிய இந்த சேலஞ்சானது, ராஷிகா மந்தானா, ராஷி கண்ணா, உள்ளிட்ட பலர் சேலஞ்சை ஏற்று மற்றொருவரை சேலஞ்ச் செய்தனர்,இவ்வாறு விரிவடைந்தது. தற்போது மகேஷ் பாபு இந்த சேலஞ்சை ஏற்றுகொண்டு அதில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் நடிகர் விஜய்யை சேலஞ்ச் செய்திருக்கிறார்.
முன்னதாக லாக்டவுன் தொடங்கிய சமயத்தில் வீட்டில் இருக்கும் பெண்களின் சுமையை குறைக்க வேண்டும். அவர்தான் உண்மையான ஆண் என்று ஒரு சேலஞ்சை தொடங்கினார் அர்ஜூன் ரெட்டி இயக்குனர். வீட்டில் பெண்களுக்கு உதவியாக கூட்டி பெருக்கி சுத்தம் செய்து அதை வீடியோவாக பதிவிட வேண்டும் என்பதுதான் சேலஞ்ச். இதில் இயக்குனர் ராஜமௌலி, என்.டி.ஆர், ராம்சரண் உள்ளிட்ட பல தெலுங்கின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது சிரஞ்சீவி, ரஜினிகாந்தையும் இதில் டேக் செய்து சேலஞ்ச் செய்திருந்தார். ஆனால், ரஜினிகாந்த் இந்த சேலஞ்சை ஏற்கவில்லை. இது சம்மந்தமாக எந்த பதிவும் கூட அவர் பதிவிடவில்லை. பொதுவாக ரஜினிகாந்த் சமூக ஊடகங்களில் அவ்வளவு ஆக்டிவ் கிடையாது.
அதேபோல சமூக ஊடகங்களில் ஆக்டிவான நபர் இல்லை விஜய். தற்போது மகேஷ் பாபு விட்டுள்ள சவாலை ஏற்பாரா, இல்லை ரஜினிகாந்த் சிரஞ்சீவியின் சவாலை ஏற்காததைபோல கடந்துவிடுவாரா என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)