Skip to main content

விஜய்யின் 'வாரிசு' படப்பிடிப்பு திடீர் நிறுத்தம் ?

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

vijay varisu movie shooting suddenly stopped

 

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் 'வாரிசு' படத்தின் படப்பிடிக்கு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பின் போது இயக்குநர் வம்சி பைடிப்பள்ளிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது இடைவெளி விட்டு, அடுத்தவாரம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்