/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/296_17.jpg)
தமிழைத் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இவருக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். இவர் விஜய் சேதுபதி நடித்த நானும் ரெளடி தான், ஜுங்கா, சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் இப்போது விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சூர்யா ‘பீனிக்ஸ் வீழான்’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குகிறார். அவரும் இப்படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக அயலி வெப் தொடர் மூலம் கவனம் ஈர்த்த அபி நக்ஷத்ரா நடிக்கிறார். இவர்களோடு காக்கா முட்டை விக்னேஷ், வர்ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராஜலட்சுமி அரசகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
இதை முன்னிட்டு அனல் அரசு மற்றும் சூர்யா, செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அனல் அரசு, “இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ராமா ஜானரில் உருவாகிறது. விஜய் சேதுபதி மலேசியாவில் படப்பிடிப்பில் இருக்கிறார். வீடியோ காலில் வாழ்த்து சொன்னார்” என்றார்.
சூர்யா, “அப்பாவுடைய பெயரில் வரக்கூடாது என முடிவெடுத்தேன். ஆனால் ஒரு நாள் அப்பாவின் ஷுட்டிங்கிற்கு சாப்பாடு கொடுப்பதற்காக சென்றேன். அங்கு அனல் அரசு மாஸ்டரின் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தது. எனக்கு சண்டை காட்சிகள் பிடிக்கும். அதனால் படப்பிடிப்பை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது மாஸ்டரின் கண்ணில் பட்டுவிட்டேன். அப்பா வேறு. நான் வேறு. அதனால் தான் சூர்யா விஜய் சேதுபதி என போஸ்டரில் போடாமல் வெறும் சூர்யா என குறிப்பிட்டுள்ளனர்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)