
தமிழில் முன்னணி நடிகராக வளம் வரும் விஜய் சேதுபதி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' இந்தியில் 'மேரி கிறிஸ்துமஸ்', 'மும்பைக்கார்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். அந்த வகையில் மலையாளத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 19(1)(a). அறிமுக இயக்குநர் இந்து இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 'ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி' தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் 19(1)(a) படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ஹாட்ஸ்டார் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். நித்யா மேனன் எழுத்தாளராக உருவாக விஜய் சேதுபதி உதவி செய்வது போல் வெளியாகியுள்ளது இந்த டீசர். இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Presenting the official teaser of 19(1)(a) starring Vijay Sethupathi, Nithya Menen, Indrajith Sukumaran, and Indrans. Coming soon on #DisneyPlusHotstarMultiplex. #191A #VijaySethupathi #NithyaMenen #IndrajithSukumaran #DisneyPlusHotstar #DisneyPlusHotstarMalayalam pic.twitter.com/UNlDTJgj57— DisneyPlus Hotstar Malayalam (@DisneyplusHSMal) July 19, 2022