Skip to main content

‘அமைதி... ஆபத்து...’ - விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
 Vijay Sethupathi Merry Christmas trailer released

தமிழைத் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, இந்தியில் 'மும்பைக்கார்', 'ஜவான்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் மௌன படமான 'காந்தி டாக்கீஸ்', தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுக குமார் இயக்கும் புது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதனிடையே பிரபல இந்தி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முக ராஜா, கவின் ஜெ பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்துள்ளார்கள். 

இப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்து, தற்போது 2024 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தை மையமாக வைத்து ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளதுபோல் தெரிகிறது. அந்த அமைதியான இரவில் சில விஷயங்களால் ஆபத்தான இரவாக மாறியதுபோல் யூகிக்க முடிகிறது. அதில் ஆக்‌ஷன், காதல் உள்ளிட்டவை கலந்து த்ரில்லர் ஜானரில் தயாராகியுள்ளது போல் ட்ரைலர் அமைந்துள்ளது.   

சார்ந்த செய்திகள்

Next Story

“பச்சை துரோகம்” - விஜய் சேதுபதியின் விழிப்புணர்வு வீடியோ

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vijay sethupathi election video

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் அன்றே நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தி.மு.க, காங்கிரஸ், இடது சாரிகள், வி.சி.க, உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனி கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க தேசிய ஜனநாயக கூடணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இதையொட்டி தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  

இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விஜய் சேதுபதி வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி பேசியதாவது, “நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தா நமக்கென்ன... இல்லை யார் காசு கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம்... ஒட்டு போட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை... இது போன்ற மனநிலையை தூக்கி ஓரம் வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.   

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு புடிச்சவங்க புடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி, அவுங்க யார் என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அவங்களால நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்க. அதில் நம்முடைய சுயநலமும் இருக்கு. நாமெல்லாம் சேர்ந்தது தானே நாடு. 

நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலைத் பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போறோம். அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு. இதுக்கு முன்னாடி அவுங்க என்ன செஞ்சிருக்காங்க, என்ன சொல்றாங்க என்பதை அலசி ஆராஞ்சி ஓட்டு போடுங்க. இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லைன்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டு போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்க. தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்க” என்றார்.  

Next Story

“கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” - விஜய் சேதுபதி வெளியிட்ட டீசர் வைரல்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Soodhu Kavvum 2 First Look and Teaser released

திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதி, அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட், தங்கம் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயரித்துள்ளனர். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க எம்.எஸ். அர்ஜுன் இயக்கியுள்ளார். கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. 

Soodhu Kavvum 2 First Look and Teaser released

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், அஷோக் செல்வன், உள்ளிட்ட சில பிரபலங்கள் அவர்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்கள். இப்படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரனை தவிர்த்து ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

டீசரில் முதல் பாகத்தை போலவே கடத்தல், காமெடி, ஆக்‌ஷன் போன்ற அம்சங்கள் இதிலும் தொடர்கிறது. குறிப்பாக மிர்ச்சி சிவா பேசும், “பொண்ணுங்களோட கற்பனையில தான் நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” என்ற வசனம் தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளது. படத்தின் இசை மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.