vijay sethupathi merry christmas new release date

தமிழைத் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, இந்தியில் 'மும்பைக்கார்' படத்தையடுத்து ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் நடித்திருந்தார். கடந்த செப்டம்பரில் வெளியான இப்படம் ஆயிரம் கோடிக்கு மேலாக வசூலித்து சாதனை படைத்தது. மேலும் மௌன படமான 'காந்தி டாக்கீஸ்', தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், ஆறுமுக குமார் இயக்கும் புது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Advertisment

இதனிடையே பிரபல இந்தி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே முக்கியமான கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்பு சில காரணங்களால் வெளியாகவில்லை.

Advertisment

பின்பு இந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என கடந்த மாதம் அறிவித்தது. இப்படி பல முறை ரிலீஸ் தேதியை மாற்றி வரும் படக்குழு தற்போது மீண்டும் மாற்றியுள்ளது. அதன் படி அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.