Skip to main content

ஒரு லட்சம் பேருக்கு வேலை... ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதி!

Published on 24/03/2022 | Edited on 24/03/2022

 

Vijay Sethupathi has created employment 1lakhs people

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி ஏழை எளிய மக்களுக்கு சமூக நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2019 ஆண்டு முதல் சமுதாயத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக வள்ளலார்  வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் இந்த நிறுவனத்தில் ஊழியர்களை அமைத்து அவர்களுக்கான ஊதியத்தையும் கொடுத்து வருகிறார். 

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட்டணமில்லாமல் வேலை தேடும் இளைஞர்கள், வேலையளிக்கும் நிறுவனங்களிடம் இருந்து தொடர்ந்து அழைப்பு வருவதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1 லட்சத்து 133 பேர் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து உள்ளார்கள்.  மேலும் இதன் மூலம் 73 சுய தொழில் முனைவோர்களையும் உருவாக்கியுள்ளதாக விஜய் சேதுபதி தரப்பினர் கூறியுள்ளனர். சத்தமில்லாமல் விஜய் சேதுபதி செய்து வரும் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

Next Story

குழந்தைகளைக் கவர்ந்த டபுள் டக்கர்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
double takkar response update

நடிகர் தீரஜ் ஹீரோவாகவும் ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் டபுள் டக்கர்.  இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.