Skip to main content

“சுத்தியல் விழுந்தால் சில வருடம் கழித்து கூட சித்தம் கலங்கும் போல”- வடிவேலுக்கு விஜய் மில்டன் கண்டனம்

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த படம் 23ஆம் புலிகேசி. இந்த படம் வெளியான சமயத்தில் நல்ல வெற்றியை பெற்றது. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார்.
 

vijay milton

 

 

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 24ஆம் புலிகேசி என்ற தலைப்பில் உருவாக்க இருப்பதாக கடந்த ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. பழைய படத்தின் அதே கூட்டணியில் உருவாக இருந்த படத்தில் லைகா நிறுவனமும் இணைந்திருந்தது. 
 

ஷூட்டிங் தொடங்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே சில பிரச்சனைகள் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களாக இப்படத்தின் பிரச்சனை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போக, இதன் காரணமாக வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தடை விதித்துள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
 

 

சமீபத்தில் தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த வடிவேலு, இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்பு தேவனை கடுமையாக விமர்சித்திருந்தார். இது சினிமாத்துறையில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பேச்சுக்கு சில திரை பிரபலங்கள் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 

இந்நிலையில் இயக்குனர் விஜய் மில்டன் வடிவேலுவுக்கு கண்டனத்தை ட்விட்டரின் மூலம் தெரிவித்துள்ளார். “தலையில் சுத்தியல் விழுந்தால் சில வருடம் கழித்து கூட சித்தம் கலங்கும் போல!உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கிறோம் அய்யா நேசமணி  அவர்களே.. ஏணிகளை எட்டி மிதித்து அதை கெடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஸ் கெட்டப் - விஜய் மில்டன் இயக்கத்தில் ஷாம்

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

vijay miton new movie with shaam

 

தமிழில் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய் மில்டன், பரத் நடிப்பில் வெளியான 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இதையடுத்து 'கோலி சோடா', '10 எண்றதுக்குள்ள', 'கடுகு', 'கோலி சோடா 2' உள்ளிட்ட படங்களை இயக்கினார். 

 

இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு நிர்மல் குமார் - விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.  

 

இந்த நிலையில், விஜய் மில்டன் இயக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ஷாம் ஹீரோவாக நடிப்பதாகவும், ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஷாம் மாஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

12பி படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமான ஷாம் லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு சகோதரராக நடித்திருந்தார்.

 

 

Next Story

விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

The film crew has released the new update of Vijay Antony movie

 

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வருகிற படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். 'இன்ஃபினிட்டி ஃபிலிம்' நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றது. 

 

இந்நிலையில் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. இதனைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம், கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார் - விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.