Skip to main content

“பெரிய வீட்டை வாங்கிவிட்டேன், பயமாக இருக்கிறது”- கோடிகளில் வீட்டை வாங்கி, பயத்தில் விஜய்தேவரகொண்டா!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

தெலுங்கு திரைப்பட நடிகரும், தென்னிந்திய படங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவரருமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் பெல்லி சுப்ளூ படத்தின் மூலம் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி பிரபலமடைந்திருந்தாலும், அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். குறைந்த படங்களிலேயே நடித்திருந்தாலும், பல படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

vjd

 

 

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படம் நான்கு மொழிகளில் வெளியானது. இதனை அடுத்து வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் மற்றும் ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.

தற்போது இவர் ஹைதரபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் மிகப்பெரிய வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். இந்த வீட்டின் மதிப்பின் சுமார் 15 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா வீடு வாங்கியது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “மிகப்பெரிய வீட்டை வாங்கிவிட்டேன். அது பயமாக இருக்கிறது. தற்போது அந்த பயத்தை போக்க எனது அம்மா தேவைப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்கேஜ்மெண்ட் கேன்சல்; மாடலிங் டூ டாப் ஹீரோயின்; ரவுண்டு கட்டி அடிக்கும் ராஷ்மிகா மந்தனா

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

Annulment of Engagement; Modeling entry.. Top Heroine... Rashmika Mandhana 

 

ராஷ்மிகா மந்தனா வெளியிடுகிற ஃபோட்டோ ஷூட் படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் வருபவை. இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான ரசிகர்களால் பின்பற்றப்படுகிறவர். அவர் செய்கிற சுட்டித்தனத்தாலும், அவர் கொடுக்கும் எக்ஸ்ப்ரெஷன்களாலும் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டே இருப்பவர். 

 

ஒருபக்கம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், இன்னொரு புறம் கலாய்க்கப்படாமலும் இல்லை. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வெவ்வேறு காமெடி காட்சிகளோடு ஒத்துப்போகும் ராஷ்மிகாவின் படங்களையும் சேர்த்து  பரப்பி விடுகின்றனர். இது ராஷ்மிகாவின் கண்களில் பட, அதை அப்படியே தன் ட்விட்டரில் பகிர்ந்த ராஷ்மிகா "வடிவேலு சார் எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார்...” என்று சொல்லி ரசிக்கவும் வைத்தவர்.

 

எல்லாவிதமான கதைகளோடும், கதாபாத்திரங்களோடும் தன்னை சோதித்துப் பார்க்க விரும்புவதாகக் கூறும் ராஷ்மிகா, ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் வைக்க வேண்டும் என்ற தனது நோக்கத்தையும், “இது உனக்கு சூட் ஆகும் ராஷ்... புகுந்து விளையாடு” என்று சொல்லும் தனது உள்ளுணர்வையுமே நம்புவதாக சொல்லி இருக்கிறார்.

 

கர்நாடக மாநிலம் விராஜ்பேட் பகுதியில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ராஷ்மிகா மந்தனா. கல்லூரிக் காலம்வரை ராஷ்மிகாவுக்கு சினிமா ஆசையே இருந்ததில்லையாம். அவர் அழகைப் பார்த்து சிலர் மாடலிங் செய்யச் சொல்ல அவரும் 'போய்த்தான் பார்ப்போமே' என்ற ஆசையில் செய்து பார்த்திருக்கிறார்.

 

இதில் ஓரளவுக்கு அடையாளம் கிடைக்க, 2012-ல் 'இந்தியாவின் புத்துணர்ச்சியான முகம்' என்ற பட்டம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அப்போது இதழியல், இலக்கியம் என்று படிப்பைத் தொடர்ந்துகொண்டிருந்த ராஷ்மிகாவிடம் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் குழுவினர் அப்ரோச் செய்ய, ரக்சித் ஷெட்டிக்கு ஜோடிபோட்டு அங்குதான் தொடங்கியிருக்கிறது ராஷ்மிகாவின் சினிமா ஆட்டம்.

 

Annulment of Engagement; Modeling entry.. Top Heroine... Rashmika Mandhana 

அறிமுக ஹீரோவோடு ஜோடி போட்டாலும், ராஷ்மிகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்த படமே கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரோடு கமிட்டானார். அதுவும் ஹிட். அப்படியே தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட்டு, மீண்டும் கன்னட சினிமாவில் என்ட்ரி கொடுத்து, ‘யஜமானா’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியையும் ருசி பார்த்தார் ராஷ்மி. இந்த வெற்றி, மற்ற மொழிப் படங்களிலும் கவனம் செலுத்த வைத்திருக்கிறது அவரை.

 

தெலுங்கு சினிமாவில் ‘வெங்கி குடுமுலா’ என்ற இயக்குநரின் ‘சலோ’ படத்தில், நாக சௌரியாவுக்கு ஜோடி ஆனார். அந்தப் படமும், அதற்கு அடுத்து வந்த படமான ‘கீதா கோவிந்தமும்’ யாருடா இந்தப் பொண்ணு என்று திரும்பிப் பார்க்க வைத்தது. அதுவும், ‘இன்கெம் காவாலே’ பாட்டில் சேலை மடிப்பை அப்பாவியாக சரிசெய்து, தமிழ் ரசிகர்களையும் அட்ராக்ட் செய்தார். அதுவே கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் மூலம் ராஷ்மிகாவுக்கு தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறது.

 

26 வயதாகும் ராஷ்மிகா மந்தனா சினிமாவுக்குள் வந்து ஆறு ஆண்டுகள்தான் ஆகின்றன. குறைந்த படங்களில்தான் நடித்திருக்கிறார். ஆனால்... ராஷ்மிகா குவித்து வைத்திருக்கும் சொத்துகளைப் பார்த்தால் எவ்வளவு தான்மா சம்பளம் வாங்குன என கேட்க வைக்கிறார். கர்நாடக மாநிலத்தில் காபி தோட்டத்திற்கு பேர் பெற்ற குடகுமலையில் 24 ஏக்கரில் காபி எஸ்டேட், விராஜ்பேட்டையில் ஷெரினிட்டி என்ற பெயரில் 2 மாடிகள் கொண்ட பெரிய பங்களா, 2 பெட்ரோல் பங்க், 5 ஸ்டார் அந்தஸ்தில் பிரமாண்ட கல்யாண மண்டபம், இன்டர்நேஷனல் ஸ்கூல் என வகை தொகையில்லாமல் சொத்துகளை வைத்துள்ளாராம்  ராஷ்மிகா.

 

எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகளின் மதிப்பு இருக்கும். "இந்த வயசுல இப்படி வளர்ச்சியா” என வாய் பிளந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ராஷ்மிகாவின் வீடு, பெட்ரோல் பங்குகள், கல்யாண மண்டபம், ஸ்கூல் ஆகியவற்றிலெல்லாம் அதிரடி ரெய்டு நடத்தி, கணக்கில் காட்டாத பணத்தைக் கைப்பற்றினார்கள் என்பது தனிக்கதை.

 

Annulment of Engagement; Modeling entry.. Top Heroine... Rashmika Mandhana 

 

கன்னட சினிமாவில் பெரிய பணக்கார ஹீரோவாக இருக்கும் ரக்‌ஷித் ஷெட்டி, முன்னணி தயாரிப்பாளரும் கூட. ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படத்தின் மூலம் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. சினிமாவிற்குள் வந்து ஒரே வருடத்தில், அதாவது 2017 ஜூலை 3-ஆம் தேதி ரக்‌ஷித் ஷெட்டிக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், ஒரே வருடத்தில் அதாவது 2018 செப்டம்பர் மாதமே நிச்சயதார்த்தம் ரத்தானது. திருமணம் நடைபெறவில்லை.

 

அதன்பின், தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய்தேவரகொண்டாவுடன் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, ‘டியர் காம்ரேட்’ படத்திலும் ஜோடி போட்டார். விஜய் தேவரகொண்டா உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. தமிழில் கார்த்தி உடன் சுல்தான், அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா என்று ரவுண்டு கட்டி அடித்த ராஷ்மிகா தமிழின் முன்னணி ஹீரோவான விஜய் உடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.

 

இன்னும் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தெலுங்கிலும் ஹிந்தியிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிற ராஷ்மிகா பெரிய ரவுண்டுக்கு தயாராகி வருகிறார்.


 

Next Story

போதும் விஜய் தேவரகொண்டா... போதும்!!! வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்

Published on 16/02/2020 | Edited on 17/02/2020

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. இளம் பெண்கள் மத்தியில் இவருக்கு செம்ம க்ரேஸ் இருப்பது உண்மை. 'நோட்டா', 'டியர் காம்ரேட்' என சற்றே வேறு பாதையில் போன விஜய் மீண்டும் தனது முழு காதல் பாதைக்கு வந்துள்ளார்.

 

vijay devarakonda



தன் வேலையை விட்டுவிட்டு, தனது லட்சியமான எழுத்தை முயற்சித்துக்கொண்டு  இருப்பவர் கெளதம் (விஜய் தேவரகொண்டா). அவருக்கு துணை நிற்பவர் காதலி யாமினி (ராஷி கண்ணா). லிவ்-இன் ஜோடியாக வாழும் இவர்களுக்குள் மெல்ல மெல்ல பிரச்னைகள் தோன்றுகின்றன. ரைட்டர்ஸ் பிளாக் (writers block) எனப்படும் எழுத்தாளர்களுக்கு ஏற்படும் சிந்தனை, கற்பனை தடை பிரச்னையால் எழுத முடியாமல், ஒரு ஆண்டுக்கு மேல் காலத்தை செலவு செய்துவிட்ட கெளதம் மீது யாமினிக்கு கோபம் வந்து ஒரு கட்டத்தில் அந்த உறவை முறித்துக் கிளம்புகிறார். பிரிந்த காதலிக்கு தனது காதலை புரிய வைக்கவும் தன்னை நிரூபிக்கவும் இரண்டு கதைகளை எழுதுகிறார் கெளதம். அந்தக் கதைகளின் தாக்கம் இந்தக் கதையை என்ன செய்தது என்பதுதான் இயக்குனர் க்ராந்தி மாதவ்வின் 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்'.

 

 

rashi kanna

 

aiswarya rajesh



விஜய் தேவரகொண்டாவின் எவர்க்ரீன் லவ்வர் இமேஜை பயன்படுத்தி அவரை 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' ஆக்கியிருக்கிறார் மாதவ். ராஷி கண்ணா, விஜய் தேவரகொண்டாவை பிரிய முடிவெடுக்கும் காரணம் வலிமையானது. விஜய் தேவரகொண்டா பாத்திரத்தின் வாழ்க்கை முறை நம்மையே வெறுக்கச் செய்கிறது. எழுத்தாளராக விஜய் தேவரகொண்டா எழுதும் கதைகளில், தெலங்கானா சுரங்க பின்னணியில் நடக்கும் விஜய் தேவரகொண்டா - ஐஸ்வர்யா ராஜேஷ் கதை சற்றே அழுத்தமுடையதாக ரசிக்க வைப்பதாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் விஜய், ஐஸ்வர்யா இருவரது மிகச் சிறந்த நடிப்பு. அதே பகுதியில் வரும் கேத்ரின் தெரசாவும் நடிப்பில் ஓகே. எழுத்தாளர் எழுதும் இன்னொரு கதையில் வருவது விஜய் - இசபெல் ஜோடி. சற்றும் மனதில் ஒட்டாத இந்த டிராக்கில் நடிகர்களின் நடிப்பும் பெரிதாகப் பயன்படவில்லை. ராஷி கண்ணா, பாத்திரத்தின் ஏமாற்றத்தை, கோபத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும் நான்கு நாயகிகளில் முதலிடம் ஐஸ்வர்யாவுக்குதான்.

 

catherine teresa

 

isabella



காதலை மையமாகக் கொண்ட படத்தில் சிறந்த காதல் தருணங்கள் எதுவும் இல்லாதது மிகப் பெரும் குறை. ஒரு காதல் படத்தில் நாயகனும் நாயகியும் எப்படியாவது சேர்ந்து விட வேண்டுமென்ற பதற்றம் பார்வையாளர்களுக்கு வர வேண்டும். ஆனால், இங்கு விஜய் தேவரகொண்டாவின் பாத்திர வடிவமைப்பு, நம்மை அப்படி உணர வைக்கவில்லை. சொல்லப்போனால், இவர்கள் பிரிவது நல்லதுதான் என்றெண்ண வைக்கிறது. இந்த அடிப்படை குறை, மற்ற எதையும் ரசிக்கவிடாமல் தடுக்கிறது. ரசிக்கவைக்காத காதல், சுவாரசியமில்லாத திரைக்கதை என செல்லும் படத்தில் காதல் வலியால் விஜய் தேவரகொண்டா கோபப்படும்போது நமக்கு பாவமாக இல்லை, அலட்சியமே வருகிறது. இப்படிப்பட்ட படம் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக நீள்வது இன்னுமொரு அயர்ச்சி.

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு சில இடங்களில் அர்ஜுன் ரெட்டியை நினைவுபடுத்துகிறது. 'ஒரு அர்ஜுன் ரெட்டி போதும் விஜய் தேவரகொண்டா' என சொல்லத் தோன்றுகிறது. கோபி சுந்தரின் இசையும் பெரிதாகக் கவரவில்லை. படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், அவை படத்துக்கு உதவவில்லை. படத்தின் தொடக்கத்தில் ஒரு வசனம் வருகிறது 'இந்த பூமியில், ஒவ்வொரு நொடியிலும் லட்சக்கணக்கான கதைகள் பிறக்கின்றன' என்று. இயக்குனர் க்ராந்தி மாதவ், அதில் வேறு ஏதேனும் கதையை நல்ல திரைக்கதையுடன் எடுத்திருக்கலாம்.