Skip to main content

"எனக்கு விருப்பமில்லை" - உதயநிதியின் முடிவு குறித்து விஜய் ஆண்டனி

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

vijay antony press meet in maamannan audio launch

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இப்படத்தின் இசை வெளியீட்டிற்காக படக்குழுவினர் உட்பட பல திரைப்பிரபலங்கள் வருகை தந்த நிலையில், படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது விஜய் ஆண்டனி பேசுகையில், "எல்லா விஷயத்திலும் தான் ஒரு அருமையான இயக்குநர் என்பதை மாரி செல்வராஜ் நிரூபித்துள்ளார். உதயநிதியின் நடிப்பில் கடைசி படம் என்கிறார்கள். அதில் எனக்கு விருப்பமில்லை. 

 

இருப்பினும் அரசியல் காரணத்திற்காக போகிறார் எனும் போது, வாழ்த்தி அனுப்ப வேண்டிய சூழ்நிலை. அதனால் போகட்டும். வடிவேலு சார் இதுவரை நடிக்காத ஒரு ஸ்பெஷல் கேரக்டர். அதைப் பார்க்கும் போது நமக்கே புதிதாக இருக்கிறது. உதயநிதியின் நடிப்பில் கடைசி படம் என்பதால் அவருக்கு என் வாழ்த்துகள்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளையராஜா பாடல் உரிமம் விவகாரம் - விஜய் ஆண்டனி பதில்

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
vijay antony about ilaiyaraaja copy wright issue

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருக்க பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதையொட்டி டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நடிக்க வந்ததிலிருந்து மற்ற படங்களுக்கு இசையமைப்பது குறைந்துவிட்டது. இந்த வருட இறுதியில் மத்த படங்களுக்கும் இசையமைக்க உள்ளேன்” என்றார். 

மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு, “ராஜா சாரின் கம்பெனியில் உள்ள பாடல்களுக்கு அவர் தான் உரிமையாளர். மற்ற விஷயங்களுக்கு இளையராஜாவிடம் மரியாதை நிமித்தமாக படக்குழு கேட்டிருந்திருக்கலாம். படம் வெற்றி பெற்றவுடன் கமலை பார்த்தது போல் இளையராஜாவையும் பார்த்திருந்தால் இந்தளவிற்கு போயிருக்காது என நினைக்கிறேன். உண்மையாக என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. ராஜா சார், முன்னதாக சொந்தமாக ஆடியோ லேபிள் வைத்திருந்தார். எகோ கம்பெனியின் உரிமையாளரும் அவர் தான் என நினைக்கிறேன். அவர் நண்பரின் பெயரில் நடத்திட்டு வந்தார். உரிமம் உள்ள பாடல்களுக்கு மட்டும் தான் அவர் ராயல்டி கேட்கிறார் என நினைக்கிறேன்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “பாடலுக்கான் உரிமம் யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் கேட்டு பயன்படுத்தலாம். பிச்சைக்காரன் 2, கொலை, திமிரு பிடிச்சவன் ஆடியோ உரிமம் என்கிட்ட தான் இருக்கு. நானும் ஒரு ஆடியோ கம்பெனி நடத்தி வருகிறேன். அந்தப் பாடலை பயன்படுத்த நினைத்தால் என்னிடம் கேட்கலாம்” என்றார். 

Next Story

ரிலீஸூக்கு தயாரான விஜய் ஆண்டனி படம்

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
vijay antony Mazhai Pidikkatha Manithan release update

விஜய் ஆண்டனி கடைசியாக ரோமியோ படத்தில் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அக்னி சிறகுகள், ஹிட்லர், காக்கி, வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன் எனப் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மழை பிடிக்காத மனிதன் படம் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் விஜய் மில்டன் இயக்க கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார்.

'இன்ஃபினிட்டி ஃபிலிம்' நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. முன்னதாக இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றது குறிப்பிடதக்கது. மேலும் நீண்ட காலமாகி எந்த அப்டேட்டும் வராத நிலையில் இப்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தின் டீசர் மே 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.