/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/158_4.jpg)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர்ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படக்குழு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பீஸ்ட் படப்பிடிப்பின் போது இயக்குநர்நெல்சன், நடன இயக்குநர்சதீஸ், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாஆகியோர் விஜய்யின்ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரைட்சென்றுள்ளனர். படக்குழு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அவர்களின் ஆசையை நிறைவேற்ற விஜய் கார் ஓட்ட அவர்களுடன் ஜாலியாகரைட் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)