Skip to main content

‘கல்வி தான் ஒரே ஆயுதம்’ - அழுத்தமான வசனங்களில் அஞ்சாமை ட்ரைலர்

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
vidharth ANJAAMAI trailer released

விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் அஞ்சாமை. இதனைத் திருச்சித்ரம் தயாரிப்பு நிறுவனம் மூலம் டாக்டர் எம்.திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார். 

இவர் இயக்குநர் மோகன் ராஜா, இயக்குநர் லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக். திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் பல படங்களில் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஜூன் மாதம் படம் வெளியாகிறது. படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு வாரியம். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவ தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டன. இதை மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அதே போல், ட்ரைலரில் வரும், ‘தேர்தலுக்கு முன் கையெடுத்து கும்பிடுவது நீங்கள், தேர்தலுக்கு முன் குனிவது நாங்களா...’, ‘கல்விய கஷ்டப்பட்டுத்தான் படிக்கனுமா, கஷ்டப்பட்டு படிக்கிற மாதிரி இந்த சிஸ்டத்த ஏன் உருவாக்கி வச்சிருக்காங்கன்னு நாம என்னைக்காவது யோசிச்சிருக்கோமா’, ‘இங்கயிருக்கிறவங்க கொஞ்சம் மானம் ரோஷம் உள்ளவங்க’, ‘இங்க ஒரு பெரிய யுத்தமே நடந்துகிட்டு இருக்கு, நம்மள மாரி ஆளுங்க உடைச்சு வெளில வரனும்னா நம்மகிட்ட இருக்குற ஒரே ஆயுதம் கல்விதான்’, எனப் பல வசனங்கள் அழுத்தமாக இருக்கிறது. இந்த ட்ரைலர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

சார்ந்த செய்திகள்