Skip to main content

வெற்றிமாறன் - ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணி உறுதியா? - வெளியான உண்மை தகவல்

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

vetrimaaran jr ntr movie update

 

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 

 

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விடுதலை படத்தின் முதல் பாகத்தில் முதல் பாடல் 'ஒன்னோட நடந்தா'  நாளை (08.02.2023) வெளியாகவுள்ளது. இப்பாடலை தனுஷ் பாடியுள்ளார். 'விடுதலை' படத்தை தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தை தொடங்கவுள்ளார் வெற்றிமாறன்.

 

இதனிடையே வெற்றிமாறன் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. வெற்றிமாறன் ஜூனியர் என்.டி.ஆரிடம் மூன்று கதைகளைச் சொன்னதாகவும் அதில் ஒரு கதையை ஜூனியர் என்.டி.ஆர் ஓகே செய்து வைத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. மேலும், அந்த கதை இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் முதல் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் இரண்டாம் பாகத்தில் தனுஷும் நடிக்கவுள்ளதாகவும் பேசப்பட்டது. 

 

இந்த நிலையில், வெற்றிமாறன் - ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணி அமைக்கவுள்ளது வெறும் வதந்தி தான் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரும் அவரவர் படங்களில் பிசியாக இருப்பதால் தற்போது இருவரும் ஒரு படத்தில் இணைய வாய்ப்பு இல்லை எனவும் கூறுகின்றனர். ஜூனியர் என்.டி.ஆர், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை தொடர்ந்து தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். அடுத்ததாக கே.ஜி.எஃப் பட புகழ் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது கொஞ்சம் சர்ச்சையான விஷயம்” - வெளிப்படையாகப் பேசிய வெற்றிமாறன்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vettrimaaran speech in kalvan audio launch

ஜி.வி பிரகாஷ், பாராதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி.ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. மேலும் கடந்த வருட கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. படம் வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் ட்ரைலர் மற்றும் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறனும் கலந்து கொண்டார் . அவர் பேசுகையில், “இந்த படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் இருக்கு. விடுதலை படத்தில் பாராதிராஜா சார் நடிக்க வேண்டும் என அவருக்கு ஹேரெல்லாம் ஷார்ட்டா கட் பண்ணிட்டு லுக் டெஸ்ட் எடுத்தேன். அப்புறம் லொகேஷன் பார்த்துட்டு, அந்த இடம் ரொம்ப குளிரென்றதால அவருக்கு சரியா வராது என சொன்னேன். என்னடா விளையாடுறியா, முடியெல்லாம் இப்புடி வெட்டிவிட்டுட்டு ஒத்துக்கவே மாட்டேன் என சொல்லிவிட்டார். என்ன ஆனாலும் நான் பண்றேன் என்றார். அப்புறம் நான் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டேன். 

கொஞ்ச நாள் கழிச்சு, டேய், என்ன வேணான்னு சொன்னில்ல, இப்ப இதே கெட்டப்புல என்னை வைச்சி ஒருத்தன் படமெடுக்க போறான் என சொன்னார். அது தான் இந்த படம். நாங்க விடுதலை படம் ஷூட் பண்ண இடத்துல தான் இதே படமும் ஷூட் பண்ணாங்க. பாராதிராஜா சார், ஸ்க்ரீனில் இருக்கும் ஒரு தருணம் கூட ஃபேக்கானதா இருக்காது. அந்த மாதிரி சின்சியரான நடிகர்கள் குறைவாகவே இருக்காங்க. அதனால் தான் அவரை எல்லாருக்கும் பிடிக்குது. எந்த நொடியுமே நடிக்க முயற்சி பண்ணாமல், அந்த இடத்தில் அந்த கதாபாத்திரமாகவே இருப்பதால் தான் அந்த உணர்வை நம்முள் ஏற்படுத்த முடியுது.

இன்னொரு விஷயம். இது கொஞ்சம் சர்ச்சையானது. யானைய வைச்சு எடுத்தாலும் டைனோசரை வைச்சு எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நல்லா இருந்தா மட்டும் தான் படம் ஓடும்” என்றார். 

Next Story

ஜப்பானில் ராஜமெளலி படம் எடுத்த புதிய பரிணாமம்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
rajamouli rrr at japan

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

இந்த நிலையில் ஜப்பானில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனால் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்ற ராஜமௌலி, சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு உரையாடினார். பின்பு அவருக்கு 83 வயது மூதாட்டி ஒருவர், 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கினார். அந்த சிறப்பு பரிசு குறித்து நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜமௌலி, “இது விலைமதிப்பில்லாத பரிசு” என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கடந்த 21ஆம் தேதி அங்கு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பானிய பெண்கள் நாடகமாக அரங்கேற்றியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “110 வருட பழமையான தகராசுகா நிறுவனத்தால் எங்கள் ஆர்.ஆர்.ஆர் படம் இசை நாடகமாக அரங்கேற்றப்பட்டது எனக்கு பெருமை. படத்தைப் போலவே நாடகத்தையும் ஏற்றுக்கொண்ட ஜப்பானிய பார்வையாளர்களுக்கு நன்றி. உங்கள் வரவேற்பால் மனம் நெகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டு அந்த நாடகத்தில் நடித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்தார். 

ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் மட்டுமல்லாமல் ஆர்.ஆர்.ஆர் பட இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.