Skip to main content

'அவள் வந்தாலே... அனல் தந்தாலே' - வெற்றிமாறன் படத்தின் பாடல் வெளியீடு

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

vetrimaaran, Andrea movie 'anal mele panithuli' first single released

 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள வெற்றிமாறன், 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் 'உதயம் என்எச்4', தனுஷின் 'கொடி' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன. அதோடு சில தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து 'காக்கா முட்டை', 'அண்ணனுக்கு ஜெ', 'வடசென்னை' போன்ற வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் வெற்றிமாறன் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'அனல் மேலே பனித்துளி'. ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை கெய்சர் ஆனந்த் எழுதி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

 

இந்நிலையில் 'அனல் மேலே பனித்துளி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. 'மிட்டாய் மிட்டாய்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இப்பாடல், ஆண்ட்ரியா கதாபாத்திரத்தின் காதலை விவரிக்கும் வகையில் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மெலோடி பாடலாக வெளிவந்துள்ள இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்