Skip to main content

நடிகர் சீனு மோகன் காலமானார் !

Published on 27/12/2018 | Edited on 27/12/2018
cheenu mohan

 

 

பிரபல நடிகரும், கிரேஸி மோகன் நாடக குழு கலைஞருமான சீனு மோகன் காலமானார். சமீபத்தில் ஏற்பட்ட சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 62. இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த வருஷம் பதினாறு படம் மூலம் அறிமுகமாகி, பின்னர் அஞ்சலி, தளபதி, விசில், இறைவி, ஆண்டவன் கட்டளை மற்றும் சமீபத்தில் வெளிவந்த ஸ்கெட்ச், கோலமாவு கோகிலா, செக்கச்சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் கிரேஸி மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீனு மோகன் என்று அழைக்கப்பட்ட இவர் சுமார் 3000க்கும் மேற்பட்ட மேடை நாடங்களில் நடித்துள்ளார். இதுதவிர மர்மதேசம், மாது +2, மதில் மேல் மாது உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகர் சீனு மோகன் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச்சடங்கு வரும் டிசம்பர் 29ஆம் தேதி சனிக்கிழமை அண்ணாநகரில் நடைபெறவுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"எங்களுக்கெல்லாம் சமகாலத்து சாக்லேட் கிருஷ்ணன்" - கமல்ஹாசன்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

kamalhassan about crazy mohan

 

பிரபல நகைச்சுவை நடிகரும், கதை, திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவும், நாடகக்கலைஞருமான மறைந்த கிரேசி மோகனின் பிறந்தநாள் இன்று (16.10.2023). தமிழ் சினிமாவில் இவரது நகைச்சுவை வசனங்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இவரது பிறந்தநாளையொட்டி திரை பிரபலங்களும், ரசிகர்களும் அவர் சம்மந்தமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

 

அந்த வகையில் கிரேசி மோகனின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன், "என் அன்புக்குரிய நண்பர் கிரேசி மோகனின் பிறந்த நாள் இன்று. நகைச்சுவை உணர்வைத் தோலாகத் தகவமைத்துக் கொண்டிருந்த மனிதர். அந்தத் தோலுக்குள்ளே, ஆழ்ந்த மரபிலக்கியப் பயிற்சி, தொன்மம் தொடர்பான அகன்ற வாசிப்பு, தீவிர உணர்வுகளின் கனம் உணரும் திறன் அத்தனையும் கொண்டிருந்தவர். அதனாலேயே எங்களுக்கெல்லாம் சமகாலத்து சாக்லேட் கிருஷ்ணனாக இருந்தவர்" என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

கமல்ஹாசன் - கிரேசி மோகன் கூட்டணி, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், பம்பல் கே சம்பந்தம், மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களை கொடுத்துள்ளது. 

 

 

 

Next Story

"எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார்" - கமல் இரங்கல்

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

kamal condolences post about crazy mohan wife passed away

 

பிரபல நகைச்சுவை நடிகரும், கதை, திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவும், நாடகக் கலைஞருமான கிரேஸி மோகன்(66) மாரடைப்பால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி காலமானார். இவரது மறைவு திரையுலகத்தில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கிரேஸி மோகனின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன், "நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக் குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது" என உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் நேற்று (18.04.2023) காலமானார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவைப் பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன். அந்த பதிவில், "எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் நளினி கிரேஸி மோகன் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.