Skip to main content

வாரிசு படத் தயாரிப்பாளரை இமிடேட் செய்த வெங்கட் பிரபு

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

venkat prabhu imitate dil raju

 

வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து 'கஸ்டடி' படத்தை இயக்கி உள்ளார். ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தில் க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். கடந்த 5 ஆம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. 

 

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 12 ஆம் தேதி (12.05.2023) திரைக்கு வரவுள்ளது. அதனால் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு. அண்மையில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது. இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை நடத்தியது. அதில் நாக சைதன்யா, க்ரீத்தி ஷெட்டி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

அப்போது பேசிய வெங்கட் பிரபு வாரிசு பட இசை வெளியீட்டில் தயாரிப்பாளர் தில் ராஜு தமிழில் பேசியது போல் தெலுங்கில் பேசினார். அவர் பேசுகையில், "ஸ்டைல் வேணுமா, ஸ்டைல் உந்தி.. ஆக்‌ஷன் வேணுமா, ஆக்‌ஷன் உந்தி.. பெர்பாமன்ஸ் வேணுமா, பெர்பாமன்ஸ் உந்தி.. என்ன வேணுமோ எல்லாமே உந்தி.." என்றுள்ளார். 

 

அதன் பிறகு ஆங்கிலத்தில் பேசிய அவர், "இது என்னுடைய முதல் தெலுங்கு படம். அதனால் எல்லாருடைய ஆதரவும் கண்டிப்பாக வேண்டும். அடுத்த பட விழாவில் நிச்சயம் தெலுங்கில் பேசுகிறேன். அப்படம் ஒரு வேளை கஸ்டடி பார்ட் 2வாக கூட இருக்கலாம்" என்றார். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மங்காத்தா செண்டிமெண்டில் வெளியாகும் விஜய்யின் ‘தி கோட்’

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay the goat movie release update

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. காவலன் படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து கேரளாவிற்கு விஜய் சென்றதால் அவருக்கு உற்சாக வரவேற்பு கேரள ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலும் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வைரலானது.

இதையடுத்து கடந்த 3ஆம் தேதி படத்தில் நடித்து வரும் பிரபு தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும், கடந்த 6ஆம் தேதி பிரஷாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. இதனிடையே ரஷ்யாவில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அண்மையில் அங்கு, படப்பிடிப்பில் விஜய் விளையாடும் சிறிய வீடியோ ஒன்று வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளார்கள். விஜய்யும் அந்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2011ஆம் ஆண்டு அஜித்தை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படமும் அந்தாண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

Next Story

பிரபு தேவாவைத் தொடர்ந்து மற்றொரு நடிகர் - கோட் படக்குழு வாழ்த்து

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
prashanth birthday poster by goat movie team

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. காவலன் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப்பிறகு கேரளாவிற்கு விஜய் சென்றதால் அவருக்கு உற்சாக வரவேற்ப்பு கேரள ரசிகர்கள் கொடுத்தன்ர். படப்பிடிப்பு தளத்திலும் அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வைரலானது.

 

prashanth birthday poster by goat movie team

கடந்த 3ஆம் தேதி படத்தில் நடித்து வரும் பிரபு தேவாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவரை வாழ்த்தி போஸ்டர் வெளியிட்டது படக்குழு. போஸ்டரில் பிரபு தேவாவின் கதாபாத்திர லுக் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கிறது. இதனால் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யாவில் இருக்கின்றனர். இந்த நிலையில் படத்தில் நடித்து வரும் மற்றொரு நடிகரான பிரஷாந்த் இன்று பிறந்தநாள் காண்கிறார். அதனால் அவரை வாழ்த்தியும் அவரது கதாபாத்திர லுக் இடம்பெற்றிருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.