varushamellam vasantham director incident happened

கடந்த 2002ஆம் ஆண்டில் வெளியான படம் வருஷமெல்லாம் வசந்தம். இப்படத்தில், இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ், குணால், அனிதா ஹாசனந்தானி, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்திருந்தனர். சிற்பி இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் பாடலாக அமைத்திருந்தது. இன்றளவும் அந்தப் பாடல்கள் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது.சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை இயக்குநர் ரவிசங்கர் இயக்கியிருந்தார். காதல் படமாக உருவாக்கப்பட்டிருந்த இப்படம், தமிழில் பெரிய வெற்றியைப் பெற்றது.

Advertisment

பிரபல இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக இருந்த ரவிசங்கர், விக்ரமன் இயக்கிய ‘சூரிய வம்சம்’ படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ‘ரோசாப்பூ.. சின்ன.. ரோசாப்பூ’ பாடலை எழுதியிருந்தார். அதன் பிறகு, தான் இயக்கிய வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களில், 5 பாடல்களுக்கும் ரவிசங்கரே வரிகள் எழுதியிருந்தார். குறிப்பாக, ‘எங்கே அந்த வெண்ணிலா’, ‘அடி அனார்கலி’போன்ற பாடல்கள் இளைஞர்கள் மனதில் கிளாசிக் பாடலாக அமைந்தது.

Advertisment

வருஷமெல்லாம் வசந்தம் படத்திற்கு பிறகு எந்தப் படத்தையும்இயக்காமலும், திருமணம் செய்யாமலும் சென்னையில் இயக்குநர் ரவிசங்கர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (12-04-24) இரவு தனது அறையில் ரவிசங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.