varisu movie shooting spot video leaked

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c05f5539-37be-4ca0-8ce9-b6b88c6aafcb" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-X-300-Viruman_21.jpg" />

Advertisment

இந்நிலையில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதில் உயிருக்கு போராடும் சரத்குமாரை விஜய், பிரபு, ஷ்யாம் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த வீடியோக்களால்அதிர்ச்சியடைந்த படக்குழு படப்பிடிப்பு தளத்தில் ஏகப்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வந்தது. அதனைமீறியும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று கசிந்துள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.