Skip to main content

“வாழ்க்கை முற்றிலும் ஊகிக்க முடியாதபடியும் பயமாகவும் இருக்கிறது”- வனிதா விஜயகுமார் உருக்கம்!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

vanithavanitha

 

 

பிக்பாஸ் சீஸன் 3 போட்டியின் மூலம் பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இவர் தற்போது ஹர்பஜன் சிங்குடன் ஃப்ரண்ட்ஷிப் என்னும் தமிழ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

இதுமட்டுமல்லாமல், அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு இருக்கிறது. சமீபத்தில் கனாடாவை சேர்ந்த தொழிலதிபருடன் அவருக்கு திருமணம் நடைபெற போவதாக தகவல் வெளியானது. அந்த செய்திக்கு மறுப்பும் தெரிவித்தார் லாஸ்லியா.

 

இந்நிலையில் கனடாவில் பணிபுரிந்து வரும் லாஸ்லியாவின் தந்தை மாரடைப்பு காரணமாக முந்தாநாள் இரவு மரணமடைந்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் இருப்பதால் லாஸ்லியாவின் தந்தையின் உடலை இலங்கைக்கு எடுத்து செல்வதில் பெரும் சிக்கல் உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதேபோல லாஸ்லியாவும் உடனடியாக இலங்கைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.

 

இந்நிலையில் இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் ட்விட்டரில் தெரிவிக்கையில், “லாஸ்லியாவின் தந்தை மரணம் குறித்துக் கேள்விப்பட்டதும் மிகவும் சோகமாக இருக்கிறோம். அவர்கள் இதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்தான் வீட்டில் சம்பாதித்துக் கொண்டிருந்தவர். மிகவும் வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கை முற்றிலும் ஊகிக்க முடியாதபடி இருக்கிறது. பயமாக இருக்கிறது. அவரது உடலையாவது நேரத்துக்குக் கொண்டு வர முடியும் என நம்புகிறேன்.

 

நான் லாஸ்லியாவிடம் பேசினேன். அவர் உடைந்து போயிருக்கிறார், அழுது கொண்டிருந்தார். ஆனால் கண்டிப்பாக அவர் வலிமையாக இருப்பார். இலங்கைக்குச் செல்ல முயன்று கொண்டிருக்கிறார். தூதரகம் வழியாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். விஜய் டிவி நிர்வாகம் அவருக்கு உதவி வருகிறது. கரோனா பிரச்சினை காரணமாக உடனடியாக மரியநேசனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர முடியவில்லை. லாஸ்லியாவுக்கு என் அன்பையும், ஆசீர்வாதங்களையும் தந்திருக்கிறேன்.

 

இப்போதுதான் அபிராமி உள்ளிட்ட இன்னும் சில பிக் பாஸ்-3 போட்டியாளர்களிடம் பேசினேன். அனைவரும் லாஸ்லியாவுடன் தொடர்பில் இருக்கிறோம். அவரது இந்தப் பயணச் சிக்கலைச் சரிசெய்ய எங்கள் உதவியையும், ஆதரவையும் தருகிறோம். ஏதாவது நடக்கும் என நம்புகிறேன். இறைவன் அவரோடு இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை வனிதா மீது கொலைவெறி தாக்குதல்; மீண்டும் கோரிக்கை வைத்த வனிதா

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

பிரபல நடிகை வனிதாவை மர்ம நபர் கொடூரமாக தாக்கிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

பிக்பாஸ் 7 விமர்சனம் குறித்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பிரபல நடிகை வனிதா காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். காரில் இருந்து இறங்கி சகோதரி சௌமியா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  'ரெட்கார்டா  கொடுக்குறீங்க... இதற்கு நீ வேற சப்போர்ட் வேற பண்றியா'' எனக்கேட்டு மர்ம நபர் ஒருவர் அவருடைய முகத்தில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இருட்டான அந்த இடத்தில் எங்கிருந்தோ ஒருவர் வந்து தன்னை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் தன்னுடைய காயமடைந்த முகத்துடன் பதிவு ஒன்றை வனிதா வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா கொடூரமாக தாக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமக்கு உடனடியாக உதவி செய்த காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உடல்நலம் பெறும் வரை தம்மை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனிதா எக்ஸ் வலைதளத்தில் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

 

Next Story

"தென்னிந்தியாவின் ஷாருக்கான் அவர்" - வனிதா புகழாரம்

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

vanitha speech in aneethi press meet

 

இயக்குநர் வசந்தபாலன் அர்ஜுன் தாஸை கதாநாயகனாக வைத்து 'அநீதி' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் வசந்தபாலனின் 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் வசந்தபாலன் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். வசந்தபாலனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற நிலையில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். 

 

அப்போது நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், "நான் என் கம்பேக்கிற்காக சில படங்களில் நடித்து வருகிறேன். ஆனால், இந்த படம் முதலில் ரிலீஸ் ஆகிறது. ரொம்ப பெருமையா இருக்கு. வசந்தபாலன் சார் ஒரு மாஸ்டர் ஃபிலிம்மேக்கர். அர்ஜுன் தாஸ் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கார். அவருக்கே வில்லன் நான். அவருடைய குரலுக்கு எல்லாரும் ரசிகர்கள் ஆகிவிடுவார்கள். ஸ்க்ரீனில் பார்க்கும் போது ஷாருக்கானை பார்த்தது போல் இருந்தது. அவர்தான் தென்னிந்தியாவின் ஷாருக்கான். அந்த வளர்ச்சி கண்டிப்பாக அவரை வந்து சேரும்" என்றார்.