Skip to main content

"பரத்திடம் நிறைய அடி வாங்கினேன்" - வாணி போஜன்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

vani bhojan speech at bharath 50th movie love

 

நடிகர் பரத்தின் 50வது படமாக உருவாகியுள்ளது 'லவ்' திரைப்படம். இப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடிக்க விவேக் பிரசன்னா, ராதா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு ரோனி ரபேல் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு பேசினர். 

 

ad

 

நடிகை வாணி போஜன் பேசுகையில், "முதலில் பரத்துடன் இன்னொரு படம் உடனே நடிக்க வேண்டுமா? என யோசித்தேன் ஆனால் இந்தக் கதை மிரள் படத்திலிருந்து மிகவும் மாறுபட்ட கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் பரத்திடம் நிறைய அடி வாங்கினேன். நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. பல சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கிறது. இந்தப் படம் எங்களுக்கு மிக நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி" என்றார். 

 

நடிகர் பரத் பேசுகையில், "என்னுடைய 50வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. வாணி போஜனுடன் மிரள் படத்தில் நடிக்கும்போது இந்தக்கதை கேட்க சொன்னேன். அவர் உடனே பிடித்து இப்படத்தில் வந்தார். அவருக்கும் எனக்கு இணையான பாத்திரம்; மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம். இப்படம் உங்களைக் கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும்" என்றார். 

 

இயக்குநர் தயாரிப்பாளர் பாலா பேசுகையில், "பரத்திடம் பல கதைகள் சொல்லி கடைசியில் இந்தக்கதை ஓகே ஆனது. P G முத்தையா சொல்லித்தான் இந்தப்படம் நடந்தது. நான் அடுத்து எடுக்கும் படத்திற்கும் பரத் சார் தான்  ஹீரோ. டிரெய்லர் விழாவில் மீதம் சொல்கிறேன் எல்லோருக்கும் நன்றி" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்” - வாணி போஜன்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
vani bhojan about vijay political entry

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனிடையே தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். மேலும் கடைசியாக தான் ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். 2024ல் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை வாணி போஜன் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்வி அவரிடம் கேட்ட நிலையில், “நல்லது நினைக்கும் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். செங்களம் சீரிஸ் நடிக்கிறப்போ ரொம்ப அழகாக இருந்தது. அந்த சமயத்தில் அரசியலில் இருக்க வேண்டும் என ஆசையாக இருந்தது. இப்பவும் இருக்கு. விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் என்ன பண்ணுகிறார் என்பதை பார்க்கலாம். எல்லாம் நம் கையில் தான் இருக்கு” என பதிலளித்தார். கடந்த வருடம் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் அரசியல் கதையான செங்களம் வெப் தொடரில் வாணி போஜன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'இரவுகள் இன்று நீளமானது...' - ‘லவ்’ பரத் & வாணி போஜன் (எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்)

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

 

 

பரத், வாணி போஜன் நடிப்பில் காதல், த்ரில்லர் டிராமாவாக வெளியாகியுள்ள படம் 'லவ்'. ஆர்.பி. பாலா தயாரித்து இயக்கியுள்ள இப்படத்திற்கு ரோனி ரபேல் இசையமைத்துள்ளார்.

படக்குழுவினரின் பிரத்யேக புகைப்படங்கள்: நவீன்