Skip to main content

"அவர் மிகச்சிறந்த நண்பராக பழகுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை" - நடிகை வாணி போஜன் 

Published on 05/12/2020 | Edited on 05/12/2020
hdfjdfj

 

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் மற்றும்  ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வழங்கும் தமிழ் இணைய தொடர் “ட்ரிப்ள்ஸ்”. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் காமெடித் தொடரான “ட்ரிபிள்ஸ்” டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் “ட்ரிபிள்ஸ்” தொடரின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள் ஊடகம், பத்திரிக்கை மற்றும் ரசிகர்களுடன் நேற்று கலந்துரையாடினர். அப்போது அந்த கலந்துரையாடலில் நடிகை வாணி போஜன் பேசும்போது....


"நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. மிகச்சிறந்த நண்பராக அவர் பழகுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. எளிமையான அவரது இயல்பு படப்பிடிப்பில் எனக்கு பேருதவியாக இருந்தது. “ட்ரிபிள்ஸ்” போன்ற ஒரு அட்டகாசமான இணைய தொடரில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். நான் மிகவும் தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே வேலை பார்த்து வருகிறேன் அந்த வகையில் “ட்ரிபிள்ஸ்” மிக தரமான தொடர். நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படங்களின் தீவிர ரசிகை அவர் நிறுவனம் தயாரிக்க, இத்தொடரில் பங்கு கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஒவ்வொரு காட்சியும்  சரியாக வர வேண்டும் என கடுமையக உழைத்திருக்கிறார் இயக்குநர் சாரு. அவரது கடின உழைப்பால் இத்தொடர் மிக அழகானதாக வந்திருக்கிறது" என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்” - வாணி போஜன்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
vani bhojan about vijay political entry

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனிடையே தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். மேலும் கடைசியாக தான் ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். 2024ல் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை வாணி போஜன் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்வி அவரிடம் கேட்ட நிலையில், “நல்லது நினைக்கும் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். செங்களம் சீரிஸ் நடிக்கிறப்போ ரொம்ப அழகாக இருந்தது. அந்த சமயத்தில் அரசியலில் இருக்க வேண்டும் என ஆசையாக இருந்தது. இப்பவும் இருக்கு. விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் என்ன பண்ணுகிறார் என்பதை பார்க்கலாம். எல்லாம் நம் கையில் தான் இருக்கு” என பதிலளித்தார். கடந்த வருடம் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் அரசியல் கதையான செங்களம் வெப் தொடரில் வாணி போஜன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

நயன்தாரா, ஜெய் மீது வழக்கு

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
case against nayanthara and jai in mumbai

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாத 1ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த மாத 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இந்த நிலையில் மத உணர்வை புண்படுத்தும் விதமாக இப்படம் இருப்பதாக குறிப்பிட்டு மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகார் மனுவில், “இந்து அர்ச்சகரின் மகள் பிரியாணி சமைப்பதற்காக நமாஸ் செய்கிறார். லவ் ஜிகாத் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. ஃபர்ஹான் கதாபாத்திரம் (ஜெய்), ராமரும் இறைச்சி உண்பவர் என்று கூறி கதாநாயகியை இறைச்சி சாப்பிடும்படி வற்புறுத்துகிறார். ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22ஆம் தேதி நடக்கவுள்ளதால், இந்து மத உணர்வை புண்படுத்தும் விதமாக இருக்கிறது” என குறிப்பிட்டு நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட படக்குழுவினர் மேல் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை வைத்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து போலீஸார், நயன் தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மேல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.