Skip to main content

பிரபல படத்தின் ஹிந்தி உரிமையை வாங்கிய 'வலிமை' தயாரிப்பாளர்!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

boney kapoor

 

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி செம ஹிட்டான படம் ‘ஹெலன்’. 'கும்பலாங்கி நைட்ஸ்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அன்னா பென், இந்தப் படத்தில் ஹெலன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவரின் தந்தை கதாபாத்திரத்தில் சண்டக்கோழி லால் நடித்திருக்கிறார்.
 

கனடா செல்வதற்காக படித்துக் கொண்டிருக்கும் வேளையில் பீட்சா கடை ஒன்றில் பார்ட் டைம் வேலையில் இருப்பார் ஹெலன். அப்போது அங்கிருக்கும் குளிர்சாதன அறையில் மாட்டிக்கொள்கிறார். அவர் உள்ளே மாட்டிக்கொண்டு விட்டார் என்பது தெரியாமல் அனைவரும் கடையை மூடிவிட்டு சென்றுவிடுவார்கள். அதன்பின் ஹெலன் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் கதை. மலையாளத்தில் இப்படத்தை வினித் சீனிவாசன் தயாரிக்க மதுக்குட்டி சேவியர் இயக்கியிருந்தார்.
 

இந்தப் படத்திற்கு மலையாளத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழில் ரீமேக் செய்ய பலரும் இதன் உரிமையை வாங்க போட்டி போட்டுக்கொண்டனர். கடைசியில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் இதன் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார். 

 

இந்நிலையில் ஹிந்தியில் இதன் ரீமேக் உரிமையை 'வலிமை' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியிருக்கிறார். அவருடைய மகளும் நடிகையுமான ஜான்வி கபூர்தான் அன்னா பென் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

“உயிரோடு இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன்” - போனி கபூர் உறுதி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
boney kapoor about sri devi biopic

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஸ்ரீ தேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

2018இல் துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்ற ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது.  

இந்த சூழலில் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு கடந்த ஆண்டு புத்தகமாக வெளியானது. இந்த நிலையில் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த போனி கபூர், “அவர் எப்போதும் தனிப்பட்ட நபராகவே இருப்பார். அவரது வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்கட்டும். அதனால் அவரது பையோ பிக் உருவாகாது. நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன்” என்றுள்ளார்.