Skip to main content

தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் காம்போவில் 'வாத்தி' படத்தின் முழு பாடல்கள் விவரம்

 

vaathi movie full song list

 

தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்குத் தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

 

இப்படத்தின் டீசர், மற்றும் முதல் பாடலாக 'வா வாத்தி' மற்றும் இரண்டாவதாக 'நாடோடி மன்னன்' உள்ளிட்ட பாடல்களை முன்னதாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் படத்தின் மொத்த பாடல்கள் குறித்த விவரத்தை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ளார். 

 

அதன்படி வாத்தி படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. அதில் 'வா வாத்தி',  'நாடோடி மன்னன்', பாடல்களை தொடர்ந்து 'கலங்குதே', 'ஒன் லைஃப்', 'சூரிய பறவைகளே' உள்ளிட்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் காம்போவில், பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் இதுவும் வரவேற்பை இப்பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.