Skip to main content

புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்பின் ‘கப்ஜா’

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

Upendra and Kichcha Sudeep starring Kabzaa release date announced

 

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடித்துள்ள படம் 'கப்ஜா'. கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.சந்திரசேகர் தயாரிக்க, நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்.சந்துரு இயக்கியுள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ஸூர் இசையமைத்துள்ளார். 

 

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச் 17 ஆம் தேதியன்று, அவருடைய புகழைக் கொண்டாடும் வகையில் இப்படம் வெளியாகிறது. இப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்க முடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக்கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் படம் தான் கப்ஜா” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்கும் இயக்குநர் ஆர். சந்துரு

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
r.chandru next movies update

பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆர். சந்துரு, தன் பயணத்தில் திரையுலகிற்கு இன்னும் பல படங்களைத் தரவிருப்பதாகக் கூறியுள்ளார். 400 கோடியில் பல பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்து, கன்னடத் துறையில் பெரிய ஹீரோக்களை அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வளர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உருவாக்கத்தில் ‘ஃபாதர்’, ‘பி ஓ கே’, ‘ராம பாணசரிதா’, ‘டாக்’ மற்றும்  ‘கப்ஜா 2’ போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. 

சந்துருவின் ஆர்.சி. ஸ்டுடியோஸ் உடன் பாலிவுட் தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் கை கோர்த்துள்ளார். ஆனந்த் பண்டிட்  ‘கப்சா 2’ மூலம் கன்னடத் திரையுலகில் நுழைகிறார். தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் சந்துருவுடன் இணைந்து 5 படங்களைத் தயாரிக்கவுள்ளார். பிரஸ்மீட்டில் கர்நாடக முதல்வர் சித்தராமையா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இதில் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ஐந்து படங்களையும், ஆர்.சி ஸ்டுடியோஸ் சார்பில் ஆர். சந்துரு உருவாக்கவுள்ளார். மேலும் இப்படங்கள் பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

Next Story

சூலம், ரத்தம், நீண்ட முடி - வெளியான காந்தாரா 2 அப்டேட்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

kantara 2 first look released

 

ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய கன்னடப் படம் 'காந்தாரா'. கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். 

 

திரை பிரபலங்கள் சிம்பு, தனுஷ், கார்த்தி, கங்கனா ரணாவத் உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர்.  மேலும் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படம் என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதோடு ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்டது. 

 

இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. அதற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் முன்னரே தொடங்கப்பட்ட நிலையில் தற்போது நிறைவுற்றதாக கூறப்படுகிறது. இப்படம் காந்தாரா படத்தின் ப்ரீக்குவலாக உருவாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் பலரும் இதில் பணியாற்றுகின்றனர். 

 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ரிஷப் ஷெட்டி உடல் முழுக்க ரத்தத்துடனும், நீண்ட தாடி மற்றும் முடியுடனும் காணப்படுகிறார். இப்படத்திற்கு ‘கந்தாரா தி லெஜண்ட் - சாப்டர் 1’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.