Skip to main content

பார்த்திபனை அங்கீகரித்துள்ள மத்திய அரசு!!!

 

parthiban

 

இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி கடந்த வருடத்திற்கான விருது பட்டியலில் இரண்டு தமிழ்ப் படங்கள் இடம்பெற்றுள்ளன.

 

இதில் பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' படத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. இந்தப் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் ஒட்டுமொத்த படத்திலும் இருப்பதுபோன்ற திரைக்கதையை அமைத்திருந்தார் பார்த்திபன். படம் வெளியானபோதே இந்தப் படத்தின் புதுமை பலரையும் கவர்ந்தது. 

 

இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் படத்தில் ஒத்த செருப்பு படம் தேர்வாகவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், தற்போது மத்திய அரசின் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ தேர்வாகி உள்ளது. 

 

இதேபோல, இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ என்ற தமிழ் திரைப்படத்திற்கும் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை.