Skip to main content

"நான் உண்மையைப் பேசுவதால் நிறைய பேருக்கு பிரச்சனையாகிறது" - உதயநிதி

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

udhayanidhi speech at gatta kusthi audio launch

 

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கட்டா குஸ்தி'. இப்படத்தை தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி தேஜாவும் விஷ்ணு விஷாலும் இணைந்து தயாரித்துள்ளார்கள். இப்படத்தை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. காமெடி கலந்த ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை (02.12.2022) வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (30.11.2022) நடைபெற்றது. 

 

அப்போது உதயநிதி பேசுகையில், "உண்மையைப் பேசுவதால் அது நிறைய பேருக்கு பிரச்சனையாகிறது. அதனால் நான் நிறைய பேசப்போவதில்லை. நானும் விஷ்ணுவும் ஒரே சமயத்தில் தான் திரையுலகிற்கு வந்தோம். ஆனா என்னை விட நடிப்பில் விஷ்ணு சீனியர். படத்தை நான் பார்த்துவிட்டேன். முதல் பாதி கொண்டாட்டமாகவும் இரண்டாம் பாதி எமோஷ்னலாகவும் இருந்தது. 

 

எனக்கு தெரிஞ்சு இயக்குநர் செல்லாவும், விஷ்ணுவும் வீட்டில் தர்ம அடி வாங்குவார்கள் போல. அது சம்பந்தப்பட்ட காட்சிகளை ரசித்து உணர்ந்து எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் கதாநாயகியை சுற்றி நிறைய பெண்கள் உட்கார்ந்து பேசிகிட்டு இருப்பாங்க. இன்னொரு இடத்தில் விஷ்ணு இருப்பார். தாய் மாமனாக கருணாஸ் நடிச்சிருக்காரு. அந்த சீன் பயங்கர கொண்டாட்டமா இருந்தது. திரையரங்கில் பார்க்கும்போது கண்டிப்பா எல்லாருடைய கணவன் மனைவிக்கும் அந்த சீன் கனெக்ட் ஆகும். இதுதான், இப்படி பேச ஆரம்பித்தாலே பிரச்சனை. கதையெல்லாம் அப்புறம் சொல்ல ஆரம்பிச்சிடுவேன். 

 

நான் விஷ்ணுவிடம் என் படத்தையே ரிலீஸ் பண்றதுக்கு டைம் இல்லை நீயே ரிலீஸ் பண்ணிடு எனக் கெஞ்சினேன். பின்பு அவர் ஆரம்பத்திலிருந்து என் திரைப் பயணத்தில் ரெட் ஜெயண்ட் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனால் நீங்களும் இந்தப் படத்தில் இருக்கணும் எனச் சொன்னார். அதனால் விஷ்ணு... எல்லாரிடத்திலும் இப்ப நான் சொன்னதை சொல்லிடு. எல்லாரும் ஏதோ நான் தான் எல்லா படத்தையும் போய் வாங்கிட்டு இருக்கன்னு நினைச்சிட்டு இருக்காங்க. ஆனால் இதுதான் உண்மை. விஷ்ணுக்காக இந்தப் படத்தில் நாங்க பயணிக்கிறோம்." என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வடசென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்குகள் கேட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் அருகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Next Story

தென்சென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) தென் சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்