Skip to main content

'விக்ரம்' படத்தை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை வெளியிடும் உதயநிதி

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

 Udhayanidhi to release film of famous actor following 'Vikram'

 

தமிழ் சினிமாவில் புது ஜானர் மற்றும் புது முயற்சிகளை எடுத்து வருபவர் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். 'டிக் டிக் டிக்', 'மிருதன்', 'டெடி' என பல புதுமையான படைப்புகளை கொடுத்துள்ளார். அந்த வகையில் அடுத்ததாக ஆர்யாவை வைத்து 'கேப்டன்' படத்தை இயக்கி வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'டெடி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் 'கேப்டன்' படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மான்ஸ்டரை மையமாக வைத்து இருக்கும் என சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் 'கேப்டன்' படத்தின் திரையரங்கு உரிமை மற்றும் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வடசென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்குகள் கேட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் அருகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Next Story

தென்சென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) தென் சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்